26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
6 6remedies
தலைமுடி சிகிச்சை

ஆண்களோ, பெண்களோ மளமளவென கூந்தல் வளர உதவும் இந்திய மசாலாப் பொருட்கள்!

ஆண்களோ, பெண்களோ முடி உதிர்வது என்பது இருபாலருக்கும் உள்ள பெரிய பிரச்சனை ஆகும். முடி உதிர்வதால் மனமுடைபவர்கள் பெரும்பாலானவர்கள் உள்ளனர். ஏன்? நீங்களும் கூட அதில் ஒருவராக இருக்கலாம். முடி உதிர்வது என்பது, சிலருக்கு பரம்பரை பிரச்சனையாக இருக்கும், சிலருக்கு புதிதாக வேலை நிமிர்த்தமாய் வெளியூர் சென்று வந்தால் இந்த பிரச்சனை வரும். ஒரு சிலருக்கு அவர்கள் உபயோகிக்கும் ஷாம்பு, ஹேர் டை போன்றவற்றின் மூலம் முடி உதிரும் பிரச்சனை ஏற்படும்.

இதற்கான தீர்வு பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கும். கூந்தலுக்கு நல்ல பயனளித்து நன்கு வளர ஏதேனும் மருந்து உண்டா என உலகம் முழுவதும் தேடிக் கொண்டு இருகின்றவரா நீங்கள்? கவலையை விடுங்கள். கூந்தல் நன்கு வளர்வதற்கு ஏற்ற மருந்து உங்களது சமையல் அறையிலேயே உள்ளது. ஆம்! சில இந்திய சமையல் மசாலா பொருட்களின் மூலம் நமது கூந்தல் நன்கு வளர வாய்ப்புகள் உண்டு. மேலும் அறிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்…

சேஜ் – மூலிகை இலை

இந்த மூலிகையின் நற்பண்புகள் சொட்டை வராமல் இருக்க உதவுகிறது. இதை உபயோகிப்பதன் மூலம் கூந்தலின் மயிர்கால்கள் வலுவடைவதால் முடி உதிரும் பிரச்சனை குறையும். இந்த மூலிகையை நீங்கள் தலைக்கு குளிக்கும் போது உபயோகிக்கும் ஷாம்புவோடும் கலந்தும் பயன்படுத்தலாம்.

வெந்தயம்

பெரும்பாலானோர் வெந்தயத்தின் பயன்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இது முடி உதிர்வை குறைத்து கூந்தல் நன்கு வளர உதவுவது மட்டும் இல்லாமல் பொடுகு பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவுகிறது.

தைம் – மூலிகைச் செடி

தைம் மூலிகை செடியில் உயர்ரக இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த மூலிகையை நீங்கள் உச்சந்தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறையும் மற்றும் உங்களது முடி நன்கு அடர்த்தியாய் வளர உதவும்.

தேவாதாரு மர இலை (Cedar Tree)

தலை முடி நன்கு ஆயுள் பெற்று வளர தேவாதாரு மர இலைகள் நல்ல பயன் தருகிறது. தலையில் நன்கு முடி வளர தேவாதாரு மர இலைகள் ஊட்டம் அளிக்கின்றது. தேவாதாரு மர இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உபயோகப்படுத்துவதன் மூலம் உங்களது தலை முடி நல்ல வலுவடையும்.

கொத்தமல்லி

தலை முடி வளர்வதற்கு கொத்தமல்லி ஒரு சிறந்த மூலப்பொருள் ஆகும். மல்லியை அரைத்து நீங்கள் தலைக்கு உபயோகிக்கும் எண்ணெயில் கலந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு வளர்வது மட்டுமின்றி முடியின் வேர்களுக்கும் ஊட்டம் அளிக்கும்

சீரகம்

கருஞ்சீரக விதைகளை நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதோடு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து பஞ்சின் மூலம் உச்சந்தலையில் தேய்த்து உபயோகப்படுத்தினால், பொடுகு தொல்லை முழுவதுமாகத் தீரும் மற்றும் தலைமுடி நன்கு வளர தொடங்கும்.

Related posts

தாங்க முடியாத பொடுகுத் தொல்லை! இதோ அற்புதமான எளிய தீர்வு…

nathan

எலிவால் கூந்தலுக்கு என்னதான் தீர்வு?

nathan

முடி அடர்த்தியாக வளர

nathan

கூந்தல் வெடிப்பை தடுக்கும் வழிமுறைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க… அடிக்கடி தலைமுடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகுமா? உண்மை என்ன?

nathan

உங்க முடி வேகமாக நீளமா வளர… உங்க சமையலறையில் இருக்க ‘இந்த’ பொருட்களே போதுமாம்…!

nathan

உங்களுக்கு அதிக நரை முடி இருக்கிறதா? இந்த ஹேர் பேக்கை வாரம் இருமுறை தடவினால் போதும்

nathan

அலட்சியம் வேண்டாம்? நீங்க இப்படியா தலைக்கு எண்ணெய் தேய்குறீங்க? அடர்த்தியான முடி கூட கொட்ட தான் செய்யும்…!

nathan

உங்கள் கூந்தல் எந்த வகை என்பதை அறிய

nathan