பெண்களின் அழகு(Beauty) என்றால் என்ன?
ஆயில், டிரை, நார்மல் மற்றும் காம்பினேஷன் ஸ்கின்னிற்கான பராமரிப்பு அழகான(Beauty) ஆரோக்கியமான முக அழகை(Beauty) பெற செய்ய வேண்டியவை முகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள செய்யகூடியவை மற்றும் கூடாதவை தினசரி மேக்கப்பிற்கான சிறந்த முறைகள்
பெண்களின் அழகு என்றால் என்ன?
அழகு என்பது உண்மையிலேயே கடவுள் கொடுத்த மிகவும் ஒரு நல்ல பரிசு. விலங்குகளின் ஆண்களின் தோற்றம் தான் அழகாக இருக்கும். உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ஆண் மயிலிற்கு தான் தோகை இருக்கும். அது போல ஆண் சிங்கத்திற்கு தான் சூரியனைப் போன்ற படர்ந்து விரிந்த கம்பீர தோற்முடைய முடி இருக்கும். ஆனால் மனிதர்களில் கடவுள் இயற்கையாகவே பெண்களை அழகாக(Beauty) படைத்துள்ளார். பெண்கள் என்றாலே அழகு தான். வெள்ளையாக ஒல்லியாக இருப்பது மட்டும் தான் அழகு கிடையாது.
கருப்பாக குண்டாக இருப்பதும் அழகு தான். புராண கதைகளில் புலவர்கள் போற்றிய பெண்கள் அப்படிதான் இருந்தார்கள். பெண்களின் துணிச்சல், தைரியம், பொருளாதார மேம்பாடு அனைத்தும் அழகை சார்ந்தது தான். ஆயினும் வெளித்தோற்றமும் முக்கியம் தானே. வெளியில் நாலு இடத்திற்கு செல்லும் பெண்கள் தங்கள் முகங்களை அழகாக வைத்துக்கொள்வதும் அவசியம் தானே. பெண்களை எவ்வாறு தங்களை அழகு படுத்திக்கொள்வது என்பதை இங்கு பார்ப்போம்.
தினசரி மேக்கப்பிற்கான சிறந்த முறைகள் (Daily Makeup Tips)
வேலைக்கு அல்லது காலேஜிற்கு கிளம்பும் போது அதிகப்படியான மேக்கப்(Beauty) தேவைப்படாது. குறைந்த அளவிளான அதுவும் மிதமான மேக்கப் மிகவும் அவசியம்.
பவுன்டேஷன் (Foundation)
முதலில் உங்க ஸகின் கலருக்கு ஏற்ற பவுண்டேஷனை தேர்ந்தெடுத்து ப்ரெஷ் கொண்டு அப்ளை செய்துக்கொள்ளுங்கள். கன்சீலர் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.
பவுடர் (Powder)
பவுண்டேஷன் பயன்படுத்தியிருப்பதால் பவுடர் அதிகம் தேவைபப்டாது. நீங்கள் எண்ணெய் சருமம் கொண்டவராக இருந்தால் சிறிது பவுடர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
கண்கள் (Eye Makeup)
ஐ லைன்னர் கம்மியாக பயன்படுத்துங்கள். கண்கள் சிறிதாக இருப்பவர்கள் காஷல் அதிக அடர்த்தியாக பயன்படுத்தலாம். கண்ணிற்கு மேலே அடர் பழுப்பு அல்லது வெளிர் நிற ஐ ஷேடோவை பயன்படுத்தலாம்.
லிப்ஸ் (Lips)
மிதமான அல்லது உடைக்கு ஏற்ப லிப்ஷ்டிக்கை பயன்படுத்தலாம். அதிக டார்க் கலர் பயன்படுத்த வேண்டாம. லிப் லைனர் மட்டும் கூட சில நேரங்களில் பயன்படுத்தலாம்.
எனினும் மேக்கப் என்பது நாங்கள் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இல்லை. உங்கள் முகத்திற்கு ஏற்ப நல்ல பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம் இது உங்கள் விருப்பமே.