அரோமா என்றால் நறுமணம். தெரபி என்றால் சிகிசிச்சை. இந்த அரோமா தெரபி சிகிச்சை தற்பொழுது வேகமாகப் பிரபலமாகி வருகிறது. மனம் அமைதியாக, நல்ல இரத்த ஓட்டத்திற்கு, அழகை மேம்படுத்த என்று மூன்று விதங்களில் அரோமா தெரபி பயன்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்வேறு சிகிச்சைகளுக்கும், அழகிற்கும் அரோமா ஆயில் பயன்படுத்தியிருக்கிறார்கள். எகிப்தில் அரோமா ஆயிலைப் பயன்படுத்தித் தான் இறந்த உடலை, நூறு வருடம் வரை கூட பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகுட்ம தலைமுடி, சருமம் அப்படியே கெடாமலிருக்குமாம்.
உலக அழகி கிளியோபாட்ரா அரோமா எண்ணெய் தான் உபயோகப்படுத்தியிருக்கிறார். கழுதைப் பாலுடன், ரோஜா எண்ணெயைச் சேர்த்து, குளிக்கப் பயன்படுத்தியதாக சரித்திரம் கூறுகிறது.
சிந்து சமவெளி நாகரீக காலத்திலும், குளிப்பதற்கு அரோமா எண்ணெய் உபயோகப்படுத்தியாக சான்றுகள் இருக்கின்றன.
பல சந்தர்ப்பங்களிலும் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி நறுமணம் உபயோகிக்கப்படுகிறது.
அரோமா எண்ணெய் அதிக பலனையளிக்கக் கூடியது. எந்தவித கோளாறுகளையும் சரி செய்யக் கூடியது. ஒரு மருந்தின் வேகத்தை விட, ஆயிரம் மடங்கு அதிகமாக வேலை செய்யக்கூடியது.
செடியின் வேர், பூ, இலை, பழம் இவற்றில் எதிலிருந்து வேண்டுமனாலும் இந்த எண்ணெய் எடுக்கப்படலாம். இது எஸன்ஸியல் எண்ணெய் எனப்படும். இது மிக ஸ்ட்ராங்கானது. இதனுடன் கேரியர் ஆயிலான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றைக் கலந்துதான் அரோமா எண்ணெய் உபயோகப்படுத்தப்பட வேண்டும். கேரியர் எண்ணெய் 10 மி.லி. ஆக இருந்தால் அதை நான்கால் வகுக்குமளவே (2.5) அரோமா எண்ணெய் பயன்படுத்தப்பட வேண்டும்.
அரோமா எண்ணெய்கள் சருமத்தை ஊடுருவி மூளை வரை செல்லக்கூடியது. எனவே தவறாகவோ, அதிகமாகவோ இதை உபயோகிக்கக்கூடாது. மற்ற எண்ணெயோடு கலப்பது மிக முக்கியம்.
ஒரு கிராம் ரோஜா எண்ணெய் எடுப்பதற்கு நூற்றுக்கணக்கான ரோஜா பூ தேவையாக இருக்கும். எனவே, விலை அதிகமாக இருக்கும். அடர்ந்த நிறமுள்ள பாட்டில்களில், இந்த எண்ணெய் விற்பனைக்கு வரும். இந்த வாசனை வெளியே போகாமல் உபயோகப்படுத்த வேண்டும்.
இருநூறுக்கும் மேற்பட்ட அரோமா எண்ணெய்கள் இருந்தாலும், அழகு மேம்பாட்டிற்கென பத்து அரோமா எண்ணெய் வகை உபயோகப்படுத்தும் முறை, நன்றாகத் தெரிந்திருந்தால் போதுமானது.
கர்ப்பிணிப் பெண்கள், உயர்ந்த இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உடையவர்கள் மற்றும் இதய நோயாளிகள் அரோமா எண்ணெய் உபயோகப்படுத்தக்கூடாது.
அரோமா எண்ணெய் தீயின் அருகில் அல்லது வெப்பமான இடங்களில வைக்கக்கூடாது. குளிர்ச்சியான இடத்திலே வைக்க வேண்டம். அரோமா எண்ணெய் எதற்கெல்லாம் பயன்படுகிறது என பார்ப்போம்.
ரோஜா எண்ணெய்
ரோஜா எண்ணெய் அரோமா எண்ணெய்களின் ராணி என்று அழைக்கப்படும். இதைத் தலைக்கும், சருமத்திற்கும் உபயோகிக்கலாம். எல்லோருக்கும் ஏற்றது. இதை உபயோகிப்பதால் புத்துணர்வும் கிடைக்கும். மனச் சோர்விலிருந்து மீளலாம்.
சாம்பிராணி எண்ணெய்.
சருமத்திற்கும், முடிக்கும் நல்லது. ஜலதோஷம் வராமலிருக்க இதை உபயோகிக்கலாம். உடன் சந்தனமர எண்ணெய் அல்லது ரோஜா எண்ணெய் கலக்கலாம்.
சாமந்திப்பூ எண்ணெய்
ஃபேஷியல் செய்வதற்கு உகந்தது. தலைவலி போக உபயோகிக்கலாம். காயங்களை ஆற்றும் குணமுடையது. பெண்களுக்கு மாதவிலக்கிற்கு முன் ஏற்படும் வயிற்று வலிக்கு, இந்த எண்ணெய் மசாஜ் கொடுக்கலாம். இதை தனியாகவோ, லவண்டர் எண்ணெயுடனோ கலந்து உபயோகிக்கலாம்.