25.6 C
Chennai
Sunday, Dec 15, 2024
30 1435647236 7 coriander
சரும பராமரிப்பு

சமையலில் பயன்படும் கொத்தமல்லி, கறிவேப்பிலைக் கொண்டு எப்படி அழகை மேம்படுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

காலநிலை மாறும் போது, உடல் வெப்பநிலை அதிகரித்து, சிலருக்கு பருக்கள் அதிகம் வரும். அதுமட்டுமின்றி, வேறுசில சரும பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

அப்படி சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி, வேப்பிலை, புதினா போன்ற மூலகை கீரைகளைக் கொண்டு சருமத்தை பராமரித்து வந்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் மேம்படும்.

சரி, இப்போது எந்த கீரையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்றும் பார்ப்போம். முக்கியமாக இப்படி கீரைகளைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும்.

புதினா

ஒரு பௌலில் கையளவு புதினாவை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள மேடு பள்ளங்களை சுருங்கச் செய்வதோடு, சருமத்துளைகளில் தங்கியிருந்த அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

வேப்பிலை

வேப்பிலையின் மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. வாரம் ஒரு முறை வேப்பிலை நீரால் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சியடைந்து, சருமத்தில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் இருந்தாலும், அவை குணமாகும். முக்கியமாக நீங்கள் முகப்பருவால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தல், வேப்பிலையை பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், பருக்கள் மறைந்து, முகம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கறிவேப்பிலை

பொதுவாக கறிவேப்பிலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க மட்டும் தான் பயன்படும் என்று தெரியும். ஆனால் அவற்றைக் கொண்டு கரும்புள்ளிகளைப் போக்கலாம் என்பது தெரியுமா? அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலை நீரில் போட்டுஇ அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, நீரை வடித்து, அந்த நீரால் முகத்தை கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

துளசி துளசியும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு துளசியை நீரில் நனைத்து, அதனை மூக்கின் மேல் 6 நிமிடம் வைத்து, பின் எடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

வெற்றிலை

வெற்றிலையை அரைத்து, அத்துடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது.

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை முகத்தில் உள்ள நீங்காத கறைகளைப் போக்க உதவும். அதற்கு வெந்தயக் கீரையை பேஸ்ட் செய்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி வறட்சியான சருமத்தை சரிசெய்ய உதவும். அதற்கு ஒரு கையளவு கொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் தேன் மற்றும் 2 துளி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

30 1435647236 7 coriander

Related posts

தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

nathan

கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்க இதை முயன்று பாருங்கள்!

nathan

மேனியின் அழகை மெருகூட்டும் சாமந்தி – ஆயுர்வேத குறிப்புகள்!

nathan

அரோமா தெரபி

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்

nathan

இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்!

nathan

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும்?

nathan

பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்

nathan

அரிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனியுங்கள் இனி…

sangika