26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.320.160.700.053.800

உங்களுக்கு தெரியுமா மார்பக புற்றுநோயை அடித்து விரட்டும் மருந்தாக மாறிய தமிழர் உணவு!

தமிழனின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். இன்று உடல் சூட்டைத் தணிப்பதற்கு ஏராளமான பானங்கள், மருந்துகள் போன்றவை விற்கப்படுகின்றன.

ஆனால், முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் வெயிலால் ஏற்படும் தாக்கத்தைத் தணிப்பதற்கு பழங்காலம் முதலாக கம்மங்கூழைத் தான் குடித்து வந்தார்கள்.

முக்கியமாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையானது. அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டிய பானம் என்பதால், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற அற்புதமான காலை உணவாகவும் இருக்கும்.

இந்த கம்மங்கூழின் நன்மைகள் குறித்து இன்று அறிந்து கொள்ளுங்கள்.

 

நன்மைகள்
    • கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் தவறாமல் குடித்து வந்தால் அதில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
    • பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுக்கலாம்.
    • கம்புவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.
    • உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால் கம்மங்கூழை தினமும் காலையில் குடியுங்கள். இது மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.625.0.560.320.160.700.053.800
  • கம்புவில் உள்ள அதிகமான நார்ச்சத்து, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும். எனவே எடை கூடாது.
  • கம்புவில் உள்ள பி வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களை உடைத்தெறிய உதவும். இது இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டைன் அளவைக் குறைத்து, கொலஸ்ட்ரால்கள் உடலில் படிவதைத் தடுக்கும்.
  • கம்மங்கூழ் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவும். இது இரத்தத்தின் அடர்த்தியைத் தடுத்து, இரத்தம் உறைவதைத் தடுத்து, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
  • மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
  • தீவிரமான ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்.