32.1 C
Chennai
Sunday, Oct 13, 2024
fat2
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இந்த ஒரு வகை பானங்களைத் தவிர்த்தாலே போதுமாம் தொப்பையை கரைக்க…

தொப்பையை குறைப்பது மிகவும் கடினமான செயல். இந்த பிரச்னைக்கு எளிய வழிமுறையை கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். உடற்பயிற்சியோடு இந்த ஒரு வகை பானங்களைத் தவிர்த்தாலே போதுமாம் தொப்பையை கரைக்க.

அப்படி எந்த உணவுப் பொருளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை கலந்த செயற்கையான குளிர்பானம்தான் அதுவாகும்.

இத்தகைய புட்டியில் அடைக்கப்பட்டு சர்க்கரையோடு, கார்பனேட்டட் வாயு ஏற்றப்பட்ட சோடாவுடன், நாம் இன்னதென்றே அறிந்திராத பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட செயற்கையான குளிர்பானங்களை நாம் குடித்ததும் அவை நாம் உண்ட உணவை செறிக்கவிடாமல் செய்து அவை கொழுப்புகளாக உருமாறி உடலைவிட்டு வெளியேறாமல், நம் வயிற்றில் கொழுப்பு சேர முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

fat2

கொழுப்பு உணவுகளை விட ஆபத்தானது சோடா, ரசாயனங்கள் சேர்த்த குளிர்பானங்கள் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கொழுப்பினை ஜீரணிக்க விடாமல் தடுக்கிறது.

இதனால் வயிற்றின் அடி பாகத்தில் கொழுப்பு படிமங்களாக படிந்து தொப்பை உருவாகிறது. இதய நோய், 2 வகை நீரிழிவு நோய், உடல் பருமன், பற்சிதைவு, மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்னைகளை தவிர்க்க முதலில் சோடா கலந்த குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உயர்ந்த சர்க்கரை உட்கொள்ளல் பசியை அதிகரித்து அதிகப்படியான உடல் எடைக்கு வழிவகை செய்கிறது.

ஒரு ஆய்வின் முடிவில் சர்க்கரை சேர்த்த உணவு, குறிப்பாக பிரக்டோஸ் அதிகளவு உள்ள உணவு பசியை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை நீக்குவதால் பசியைக் கட்டுப்படுத்த இயலும், இது பசி இல்லாமல் எடை மற்றும் தொப்பை கொழுப்பை இழக்க உதவுகிறது.

சோடா மற்றும் இதர சர்க்கரை பானங்களில் அதிகப்படியான கலோரிகள் இருக்கிறது. இத்தகைய பானங்களை உட்கொள்வதினால் உங்களுக்கே தெரியாமல் அதிகப்படியான கலோரிகள் உங்கள் உடலில் சேர்கிறது.

இதனால் உடல் பருமனும் அதிகரிக்கிறது. உதாரணமாக, 12-அவுன்ஸ் சோடா கலந்த செயற்கை குளிர்பானத்தில், 140 கலோரிகள் மற்றும் 39 கிராம் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.

இந்த பானங்களை குடிப்பதினால் எளிதாக பல நூறு கலோரிகள் உங்கள் உடலில் சேர்கிறது.

சோடா மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்கள் உட்கொண்டால் இன்னும் பிற உடல் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆய்வுகள் சொல்கின்றன.

அவை இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக சிக்கல்கள், சோர்வு போன்றவையாகும்.

சோடாவைக் தவிர்ப்பதினால் எடை இழப்பு மட்டுமல்ல, ஆழ்ந்த தூக்கம், இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் சீராகுதல், போன்ற மிகச் சிறந்த நன்மைகள் கிடைக்கும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக‌ தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள். ஆய்வின்படி தண்ணீர் குடித்து 30 நிமிடம் கழித்து சாப்பிடும் உணவு நன்றாக‌ செரிமானம் ஆவதுடன், எடை குறைப்பிற்கும் வழி வகை செய்கிறதாம்.

புரதம், நார்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடனான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும், உடல் எரிச்சலைக் குறைப்பதற்கும், வயிற்றுப் போக்கை சரி செய்யவும் உதவுகிறது.

Related posts

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

நிதி நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

nathan

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

இந்த ராசிக்காரங்க வாழ்க்கை முழுக்க தோல்வி துரத்துமாம்…

nathan

மாசில்லாத கண்ணாடி போன்ற சருமம் பெற வேண்டுமா?

nathan

பிஸ்தா எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். இளமை தரும் பிஸ்தா!

nathan

வைரல் வீடியோ!-தாய் தந்தைக்கு கிரீடம் சூடி மகிழ்ந்த மிஸ் இந்தியா ரன்னர் மான்யா சிங்

nathan

சுவையான கொண்டைக்கடலை கட்லெட்

nathan

இதோ எளிய நிவாரணம்! அதிக முகப்பருக்களைக் கொண்ட ஆண்களுக்கான சில ஷேவிங் டிப்ஸ்…!

nathan