28.6 C
Chennai
Saturday, May 18, 2024
1430547280 0849
அசைவ வகைகள்

மீன் குருமா

தேவையான பொருள்கள் :

மீன் – 500 கிராம்
வெங்காயம் – 60 கிராம்
தேங்காய் – 4 துண்டு
பச்சை மிளகாய் – 5
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறு துண்டு
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 3
எண்ணெய் – 50 கிராம்

செய்முறை :

முதலில் மீனைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கிக் கழுவிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை நீர்விட்டு விழுதாக அரைக்கவும்.பின் பச்சை மிளகாயை வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சிறிது நீர் விட்டு நசுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு ஆழாக்கு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததம், வெங்காயம், நசுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மசாலா, அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் சிவந்து மணம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் ஊற்றி மூடி விட வேண்டும்.

15 நிமிடங்கள் கொதித்த பிறகு மூடியை அகற்றி, சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை அதில் போட்டு, மீன் வெந்ததும் குருமாவை இறக்கி விட வேண்டும்.

1430547280 0849

Related posts

சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு

nathan

ஆந்திரா கோங்குரா சிக்கன்

nathan

பாதாம் சிக்கன்

nathan

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட்

nathan

சுவையான கொங்குநாடு கோழி குழம்பு

nathan

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan

சிவையான நாட்டுக்கோழி வறுவல்

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்

nathan