28.3 C
Chennai
Friday, May 17, 2024
09 1512814295 8
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு‘ஃபேட்டி லிவர்’ பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க இதச் சாப்பிடுங்க!

Choline எனப்படுவது ஒரு வகை மைக்ரோ நியூட்ரியண்ட். கல்லீரல் செயல்பாட்டிற்கு இது மிகவும் அவசியமானதாகும். அதே போல மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்திற்கும் இது முக்கியப் பங்காற்றுகிறது. இந்த கொலைன் தண்ணீரில் கரையக்கூடிய நியூட்ரியண்ட் ஆகும். பி விட்டமின்ஸ் போலவே நம் எனர்ஜிக்கும் இது உறுதுணையாய் இருக்கிறது.

தினமும் : நம் உடல் தானாகவே மிகச்சிறிய அளவில் கொலினை தயாரித்துக் கொள்ள முடியும். இது மிகச் சிறிய அளவு தான். மற்றபடி நம் உடலுக்கு தேவையான கொலினை உணவின் மூலமாகத்தான் பெற்றுக் கொள்ள முடியும்.

எதில் இருக்கிறது? : பொதுவாக இந்த கொலின் என்ற சத்து முட்டை, ஆட்டின் கல்லீரல், மாட்டுக்கறி, மீன்,காலி ஃப்ளவர், தாய்ப்பால் ஆகியவற்றில் இருக்கிறது. இவற்றின் முட்டையில் தான் மிக அதிகமாக இருக்கிறது.

ஒரு நாளில் : கைக்குழந்தைகளுக்கு 125 முதல் 150 மில்லி கிராம் இருந்தால் போதும், பத்து வயதிற்குட்பட்ட குழந்தை என்றால் 250 மில்லி கிராம் இருக்கலாம். வளர் இளம் பருவத்தினருக்கு 375 மில்லிகிராம். அதைத் தாண்டிய பெண்களுக்கு 420 மில்லி கிராமும் ஆண்களுக்கு 500 மில்லி கிராம் அளவிற்கும் தேவைப்படும். கர்ப்பமான பெண்கள், மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு 550 மில்லி கிராம் வரை தேவைப்படும்.

குறைந்தால் : உங்கள் உடலில் கொலின் அளவு குறைந்தால் சில அறிகுறிகளை வைத்து நீங்கள் கண்டு பிடிக்கலாம். மிகவும் சோம்பலாக இருக்கும், நினைவுத்திறனில் குறைபாடு, உடல் வலி, கூர்ந்து கவனிப்பது, படிப்பதில் ஆர்வம் குறைந்திடும், அடிக்கடி உங்கள் மனம் அலைபாய்வது போலத் தோன்றும்.

டி. என். ஏ : கொலின் என்ற நியூட்ரியண்ட் நம் உணவுகளில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளலாம். கொழுப்பை கிரகித்து செல் மெம்பரைன் உருவாக்க காரணமாக அமைந்திடுகிறது. கொலின் இல்லாமல் நம் உடலில் இருக்கும் செல்கள் தனக்குரிய வடிவத்தை பெறாது. அதே போல உடல் உறுப்புகளுக்கு உறுதுணையாகவும் இருக்கிறது. இது டி. என். ஏ உருவாக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. கொலின் மற்றும் ஃபோலேட் தான் நம்முடைய மரபணுவை உறுதி செய்கிறது.

மத்திய நரம்பு மண்டலம் : கொலின் இருப்பதனால் நம் உடலில் மிகவும் முக்கியமான மத்திய நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கிறது. நரம்புகளையும் அதன் திசுக்களையும் இது பாதுகாக்க உதவுகிறது.

எடை குறையும் : கொழுப்பை கிரகத்திக் கொண்டு எனர்ஜியாக மாற்றும் வேலையை கொலின் செய்வதால் நம் உடலில் இருக்கும் கொழுப்பு கரைய இது பயன்படுகிறது. இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். நாம் தொடர்ந்து அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்த்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்திடும்.

கல்லீரல் செயல்பாடு : கல்லீரலின் துரித செயல்பாட்டிற்கு கொலின் பக்கபலமாக இருக்கிறது. கல்லீரலில் ஏறபடக்கூடிய ஃபேட்டி லிவர் என்ற நோய் வர விடாமல் தடுக்கிறது. அதோடு ட்ரைகிலிராய்ட்ஸ் என்ற சத்து வெளியேற்றப்படுவதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கிறது.

குழந்தை : வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டு வர வளர்ச்சிக்கு கொலின் மிகவும் அவசியமானது. கர்ப்பமான பெண்கள், முதல் மூன்று மாதங்களில் கொலின் அதிகமிருக்கும் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இதயம் : இது இதய நலனுக்கும் மிகவும் நல்லது. இது நம் ரத்த நாளத்திற்கு வலுவூட்டுகிறது. அதே போல ரத்த ஓட்டத்தையும் சீராக்குவதால் நம் இதயத்திற்கு சீரான ரத்தம் கிடைக்கப்பெறுகிறது. கொழுப்பு அதிகம் சேராமல் தடுப்பதால், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

09 1512814295 8

Related posts

தூதுவளையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்திவர கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்…

sangika

அடுத்தவர் விஷயத்தில் தலையீடு வேண்டாமே

nathan

ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

சுவையின்மைக்கான சித்த மருந்துகள்

nathan

குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்த விஷயத்தை முதல் குழந்தையிடம் எவ்வாறு பகிர வேண்டும்?

nathan

பெண்களை தாக்கும் சினைப்பை புற்றுநோய்: தடுப்பது எப்படி?கட்டாயம் இதை படியுங்கள்

nathan

உங்க உடல் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய 5 பொருட்கள்!!

nathan

அவசியம் படிக்க..இம்யூனிட்டி ஹெல்த்தி வழிகாட்டி

nathan