33.3 C
Chennai
Saturday, May 18, 2024
1 besan chutney 1650373825
சட்னி வகைகள்

கடலை மாவு சட்னி

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (கீறியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* சர்க்கரை – 1/4 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

Besan Chutney Recipe In Tamil
* பின் அதில் கடலை மாவை சேர்த்த 2 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.

* அடுத்து நீர் ஊற்றி நன்கு கிளறி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கடலை மாவு சட்னி தயார்.

Related posts

பச்சை மிளகாய் வெங்காய சட்னி

nathan

சூப்பரான செட்டிநாடு மிளகாய் சட்னி

nathan

இட்லிக்கு தொட்டுக்க சுவையான பொடி செய்வது எப்படி?

nathan

சூப்பரான முட்டைக்கோஸ் சட்னி

nathan

சுவையான தேங்காய் கறிவடகத் துவையல்

nathan

கேரட் – வெந்தயக்கீரை சட்னி

nathan

சத்தான கறிவேப்பிலை சட்னி

nathan

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

nathan

லெமன் சட்னி

nathan