moong dal potato recipe
சமையல் குறிப்புகள்

சுவையான பச்சை பயறு உருளைக்கிழங்கு கடைசல்

எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்குமாறான பச்சை பயறு மற்றும் உருளைக்கிழங்கை கடைந்து சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவையே அருமையாக இருக்கும்.

இங்கு அந்த பச்சை பயறு உருளைக்கிழங்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பச்சை பயறு உருளைக்கிழங்கு கடைசல்
தேவையான பொருட்கள்:

பச்சை பயறு – 1 கப் (வேக வைத்தது)
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்தது)
தக்காளி – 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 5 (நீளமாக கீறியது)
இஞ்சி – 1 துண்டு (துருவியது)
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பயறை லேசாக கடைந்து, பின் அதனை வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், பச்சை பயறு உருளைக்கிழங்கு கடைசல் ரெடி!!!

Related posts

சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

nathan

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika

சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

nathan

கேரளா ஸ்டைல் வெங்காய புளிக்குழம்பு

nathan

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயை எப்போதெல்லாம் பயன்படுத்தக்கூடாது?

nathan

காளான் பெப்பர் ப்ரை

nathan

அரிசி மாவில் காய்கறிரொட்டி செய்முறை…..

sangika