cashew murukku jpg 1148
கார வகைகள்

தேங்காய் முறுக்கு

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 4 கப் (கடைகளில் கிடைக்கும் மாவே எடுத்து கொள்ளலாம் )

உளுந்து மாவு – 1/2 கப் (உளுந்து எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும் )

பொட்டு கடலை மாவு – 1/2 கப்

ஓமம் – 1 ஸ்பூன்

வெள்ளை எள்ளு – 1 ஸ்பூன்

பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன்

நெய் – 4 ஸ்பூன் (விருப்பம் உள்ளவர்கள் வெண்ணை சேர்த்து கொள்ளலாம் )

தேங்காய் – 1 (நன்றாக அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.முதல் பால் இரண்டாம் பால் எல்லாம் எடுத்து கொள்ளவும் .)

உப்பு ருசிகேற்ப

எண்ணெய் முறுக்கு பொறித்து எடுக்க .

செய்முறை :

மேலே சொன்ன பொருட்களை தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும் .தேவை என்றால் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும் .முறுக்கு மாவு அழுத்தமாக இல்லாமல் அதே சமயம் ரொம்ப லூசாகவும் இல்லாமல் பிசைந்து கொள்ளவும் .

எண்ணெய் சுட வைத்து முறுக்காக பிழிந்து பொறித்து எடுக்கவும் .

விரும்பியவர்கள் தேங்காய் பாலுக்கு பதில் தேங்காயயை நன்றாக மைய அரைத்தும் சேர்த்து கொள்ளலாம் .cashew murukku jpg 1148

Related posts

வெங்காய சமோசா

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது?

nathan

தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு(முள்ளு முறுக்கு)

nathan

தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

nathan

ஆத்தூர் மிளகு கறி,tamil samyal kurippu

nathan

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்!….

sangika

சத்தான டயட் மிக்சர்

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

nathan