தென்னிந்தியாவில் உள்ள சிதம்பரத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் கத்திரிக்காய் கொஸ்து. இந்த கத்திரிக்காய் ரெசிபியானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு நிவேத்திய ரெசிபி. இது மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த சிதம்பரம் நடராஜர் கோவிலில் செய்யப்படும் அந்த கத்திரிக்காய் கொஸ்துவை உங்கள் வீட்டில் செய்ய வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படித்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 4
சின்ன வெங்காயம் – 1 கப்
புளிச்சாறு – 1/4 கப்
சிவப்பு மிளகாய் – 4
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை நறுக்கிக் கொண்டு, அதனை குக்கரில் போட்டு, உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள், சிவப்பு மிளகாய், மல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை திறந்து அதில் உள்ள கத்திரிக்காயை மசித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் புளிச்சாறு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அத்துடன் மசித்த கத்திரிக்காய், மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கத்திரிக்காய் கலவையில் ஊற்றினால், சிதம்பரம் கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!