தேவையான பொருட்கள்
பிரவுன் பிரட் – 8
முட்டை – 3 or 4
(சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளைகருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் )
வெங்காயம் – 1 பெரியது
(சின்ன வெங்காயம் ஒரு சிறிய கப் அளவுக்கு )
பெப்பர் பவுடர் – 1டீ ஸ்பூன்
குடை மிளகாய்- 1 சிறியது
வெள்ளரி – அரையளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாணலியில் இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும் .பின் உப்புத்தூள் பேப்பர் பவுடர் சேர்த்து வதக்கவும். இடையில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும் ( முட்டை வெள்ளைக்கருவை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் ) வெங்காயம் வதங்கியதும் முட்டையை கலந்து கிண்டவும். இறுதியில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் வெள்ளரி கலந்து இறக்கவும்.
பிரவுன் ப்ரெட்டை ஓரத்தை கத்தரித்து வைத்துக்கொள்ளவும்.
அதை முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
இரண்டு பிரட் துண்டங்களுக்கு நடுவில் முட்டை கலவையை வைத்து sandwich மேக்கரில் வைத்து எடுக்கவும்.
இதை சப்பாத்தி ரோலாகவும் செய்து கொள்ளலாம்
தொட்டுக்கொள்ள புதினா dip
புதினா தழை சிறிதளவு , சிறியபூண்டு ஒரு பல், சிறிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து பசை போல் அரைத்துக்கொள்ளவும். அதோடு உங்கள் ருசிக்கு ஏற்ப கெட்டித்தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான புதினா dip தயார்.