25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
images 22
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

பெண்கள் தங்களின் சரும நிறத்தையும், அழகையும் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்குகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள்..

• பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

• ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

• மஞ்சளுடன் சிறிது தக்காளி சாற்றினை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதை காணலாம்.

• பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து பின் முகத்தை கழுவி விட வேண்டும். இது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தை பிரகாசமாக்கும்.

• வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இதனை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்லது.

Related posts

சூட்டை கிளப்பி விடும் பிகினி உடையில் பூனம் பஜ்வா -இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா…

nathan

இயற்கை குறிப்புகள்…!! சருமத்தை இளமையுடனும் பொலிவுடனும் வைக்க உதவும்

nathan

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

nathan

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

மங்கு குணமாகுமா?

nathan

முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

nathan

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு!

nathan

வேனிட்டி பாக்ஸ்: சிவப்பழகு

nathan

நாளடைவில் பித்த வெடிப்பு போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan