Herbal powder jpg 1160
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகு தரும் குளியல் பொடி

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.
சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
வெட்டி வேர் – 100 கிராம்
அகில் கட்டை – 100 கிராம்
சந்தனத் தூள் – 150 கிராம்
கார்போக அரிசி – 100 கிராம்
தும்மராஷ்டம் – 100 கிராம்
விலாமிச்சை – 100 கிராம்
கோரைக்கிழங்கு – 100 கிராம்
கோஷ்டம் – 100 கிராம்     
ஏலரிசி – 100 கிராம்
பாசிப்பயறு – 250 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும்.
மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

Related posts

சருமம் பிரச்சனைகளை நீக்கி, முகம் பொலிவாகவும், அழகாகவும் இத செய்யுங்கள்!…

nathan

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் மனைவியின் ரகசிய காதலன்!

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா?

sangika

சருமத்தை பொலிவடைய செய்யும் சர்க்கரை ஸ்கரப்

nathan

அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan

அக்குள் கருமையை போக்க வழிகள்

nathan

முயன்று பாருங்கள், முகம் பளிச் ஆக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

nathan

உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்!

sangika