36.4 C
Chennai
Tuesday, Jul 8, 2025
DarkCircles
சரும பராமரிப்பு

சருமத்தின் ஈரப்பதத்தை காக்கும் ஃபேஸ் பேக்குகள்

சருமத்தை எப்பொழுதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை சரியாக பராமரிக்காவிட்டால், சருமத்தில் ஏற்படும் வறட்சி அதிகரித்து, ஆங்காங்கு வெடிப்புகள் மற்றும் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அதற்கு வெறும் மாய்ஸ்சுரைசரை மட்டும் தடவினால் போதாது. அவ்வப்போது சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளை போட்டு வர வேண்டும்.

• அவகேடோ பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஈரப்பசையானது நீங்காமல் இருக்கும்.

• பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் உங்களது சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

• முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமம் வறட்சியின்றி, மென்மையாகவும், சுருக்கங்களின்றியும் இருக்கும்.

• வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும். வாழைப்பழம் சருமத்தில் ஈரப்பசையை தங்க வைக்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.DarkCircles

Related posts

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா?

nathan

குழந்தையை போன்ற மிருதுவான சருமம் பெறவேண்டுமா? இதெல்லாம் ட்ரை பண்ணலாமே

nathan

உங்களுக்கு தொடை, பிட்டம், கை போன்ற பகுதிகளில் அசிங்கமாக கோடுகள் தெரிகிறதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

ஆபத்தா…! குளித்தவுடன் வியர்வை வருவது ஏன்?

nathan

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு!

nathan

வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய இதை செய்யுங்கள்!…

nathan

உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்!

sangika

உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

nathan

கழுத்து பராமரிப்பு

nathan