பழரச வகைகள்

மாம்பழ பிர்னி

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழம் – 2
அரிசி – 2 டே.ஸ்பூன்,
கெட்டியான பால் – 3 கப்,
சர்க்கரை – சுவைக்கு
ஏலப்பொடி சிறிதளவு,
சன்னமாக சீவிய பாதாம், பிஸ்தா, சாரைப்பருப்பு அலங்கரிக்க

செய்முறை :

• மாம்பழங்களை தோல்சீவி சன்னமாக நறுக்கி வைக்கவும்.

• அரிசியை 30 நிமிடம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும்.

• அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

• அதில் அரைத்து வைத்துள்ள அரிசி விழுதைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும். விழுது நன்கு வெந்து பளப்பளப்பான நிறம் வந்ததும் தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

• தேன் நன்றாக சேர்ந்து கொதிக்கத் தொடங்கியதும் இறக்கி சிறிது ஆறியதும், நறுக்கி வைத்துள்ள மாம்பழங்களை அலங்கரிக்கப்பதற்கு சிறிதளவு தனியாக வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை லேசாகப் பிசைந்து கூழ்போல் செய்து இறக்கி வைத்துள்ள பாலோடு கலந்து விட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.

• 2 நிமிடம் கழித்து நறுக்கிய மாம்பழம், பருப்புகளைத் தூவி அலங்கரிக்கவும்.

• குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்திருந்து சில்லென்று பரிமாறவும். குளிர்ச்சி விரும்பாதவர்கள் அப்படியே அருந்தினாலும் நன்றாக இருக்கும்.

Related posts

பேரீச்சை வித் காபி மில்க் ஷேக்

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்

nathan

பேரீச்சை காபி மில்க் ஷேக்

nathan

சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக்

nathan

தர்பூசணி – ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

nathan

வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்

nathan

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்!….

sangika