ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்துவமான உணவு முறை இருக்கத்தான் செய்கிறது.
நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களிலும் ஏதோ ஒரு பயன் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக காரணம் கருதியே ஒரு பொருளை நாம் உருவாக்குகிறோம். சில பொருட்கள் இயற்கையாகவே மருத்துவ தன்மை கொண்டதாக உள்ளது.
அழகு என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்று. அழகு படுத்து கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்.
அது மாத்திரம் இன்றி, அழகு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது சீனப் பெண்கள். சீனப் பெண்கள் தங்கள் குறைபாடற்ற பீங்கான் சருமம், மெலிந்த உடல், தீஞ்சுவை கூந்தல் என அழகாக காட்சி அளிக்கிறார்கள்.
அவர்கள் எந்த அழகு சாதனப் பொருட்களும் அணியாமலே அழகாக காட்சி அளிக்கக் கூடியவர்கள். வயதான பெண்களிலிருந்து இளமைப் பெண்கள் வரை ஓரே மாதிரியான சரும நிறத்தை பெற்றிருப்பார்கள்.
அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டாலே போதும் தமிழ் பெண்களும் அழகில் ஜொலிக்கலாம்.
இஞ்சி ஒரு மருத்துவ பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை தினமும் சாப்பிடுவதால் தான் சீனப் பெண்களின் அழகும், இளமையும் குறையாமல் இருக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இஞ்சியை பற்றிய ஆயிர கணக்கான ஆராய்ச்சிகள் பல வித முடிவுகளை நமக்கு தந்துள்ளது.
அதுவும் தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் உடலில் அற்புதங்கள் ஏராளமாக நடக்கும்.
சீன மக்கள் எடை குறைப்பதற்காக அதிக அளவு இஞ்சி டீ குடிப்பார்கள். இது கேட்சின்கள் நிறைந்தது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட், முதுமையை நீக்கும் பண்புகள், நோய் எதிர்ப்பு மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றை உறுதிபடுத்துகிறது. இஞ்சியை வெந்நீரில் 2-3 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு தேனீர் செய்து குடியுங்கள்.
அது மாத்திரம் அல்ல, சீனப் பெண்கள் தங்கள் நிறத்தை அதிகரிக்க அரிசி நீரை பயன்படுத்துகின்றனர்.
அரிசியை நன்கு ஒரு கிண்ணத்தில் ஊற வைத்து, அந்த நீரானது வெள்ளையாக மாறும் வரை ஊற வைக்க வேண்டும்.
பின் அதனை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைத்து டோனராக பயன்படுத்தலாம். இது மிகவும் அற்புதமானது மற்றும் மலிவானது.
இதனை 3-4 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இது தெரியாமல் தமிழ் பெண்கள் விலை கொடுத்து அழகு சாதன பொருட்களை வாங்கி பயன் படுத்துகின்றனர்.