suriya
Other News

17 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இயக்குனர்..! சூர்யாவை இப்படித்தான் உயரமாகக் காட்டினோம்

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காக்க காக்க.சூர்யா, ஜோதிகா கெரியரில் மிகவும் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.

இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைக்கிறாராம் கவுதம் மேனன். சூர்யா படுபிசியாக இருப்பதால் அவருக்கு பதில் அன்புச் செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக விஷாலை நடிக்க வைக்கலாமா என்ற யோசனையில் உள்ளாராம் கவுதம்.

அன்புச் செல்வன் என்றாலே சூர்யா என ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. அப்படி இருக்கும்போது அந்த கதாபாத்திரத்தில் விஷாலை நடிக்க வைப்பது எந்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன் காக்க காக்க படத்தில் சூர்யாவை எப்படி உயரமான ஆள் போல படம்பிடித்தோம் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் கட்டுக்கோப்பாக உடலை வைத்துள்ள ஒரு சில நடிகர்களில் சூர்யாவும் ஒருவர்.

ஆனால் அவர் மற்ற கதாநாயகர்களை விட உயரம் குறைவு. அதனால் அவரை போலிஸ் அதிகாரியாக நடிக்கும் படங்களில் உயரமாக காட்ட சில ட்ரிக்ஸ்களை இயக்குனர் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் காக்க காக்க என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை சூர்யாவுக்குக் கொடுத்த கௌதம் மேனன் அந்த படத்தில் சூர்யாவை எப்படி உயரமாகக் காட்டினோம் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அந்த படத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அளித்த பேட்டி ஒன்றில் ’சூர்யாவை உயரமானவராக காண்பிக்க பல ஷாட்களை லோ ஆங்கிளில் படம்பிடித்தோம். ’ என சொல்லியுள்ளார்.

Related posts

செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க..!!

nathan

இரண்டாவது திருமணமா? விரைவில் அம்மாவாகும் சமந்தா

nathan

மார்பு பகுதியில் பண்ற வேலையா இது..?விளாசும் ரசிகர்கள்..!

nathan

கனடாவில் விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு நல்ல செய்தி! 2 வருட வேலை விசா

nathan

girl baby symptoms in tamil – பெண் குழந்தை அறிகுறிகள்

nathan

சாஸ்திரப்படி வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் ராசிகள்!

nathan

நடிகர் பகத் பாசில் சொத்து மதிப்பு..

nathan

49 வயதாகும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு

nathan

கார்த்திக்கு இவ்வளவு பெரிய மகளா? புகைப்படம்

nathan