28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
bharath
Other News

அடேங்கப்பா! சினிமா மேல் உள்ள ஆசையால் டாக்டர் தொழிலை தூக்கி எறிந்த பிரபலங்கள் லிஸ்ட்..

டாக்டருக்கு படித்துவிட்டு சினிமா மேல் உள்ள அதீத மோகத்தினால் டாக்டர் தொழிலை தூக்கி எறிந்த நடிகர் நடிகைகள் உள்ளனர். இது தங்களது ஃபேஷனை வாழ்க்கையாக மாற்றிய சம்பவம் என்றே கூறலாம், ஆனால் ரசிகர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் நிலைத்து இருக்க முடியும்.

சாய் பல்லவி:

ரவுடி பேபி பாடலின் மூலம் உலக அளவில் பிரபலமான சாய் பல்லவி. 2016 ஆம் ஆண்டு டாக்டரானார், சாய்பல்லவி அதற்கு முன்னதாகவே சினிமாவில் நடிக்க தொடக்கி விட்டார். தற்போது சினிமா மேல் உள்ள மோகத்தினால் மட்டுமல்லாமல் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்ததால் டாக்டர் தொழிலை விட்டுவிட்டு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

சேதுராமன்:

சேதுராமன் ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்தில் ஹீரோவாக நடித்தவர். இவர் சொந்தமாக ஒரு ஸ்கின் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார். சினிமாவில் கொண்ட மோகத்தினால் அதனை பார்ட் டைமாக வேலை பார்த்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவர் உயிரிழந்த சம்பவம் சினிமா துறையில் உள்ள நண்பர்களை பெரிதாக பாதித்தது.

பரத் ரெட்டி ராம்:

bharath

பரத் ரெட்டி ராம், கார்டியாலஜி முடித்தவர், அதுமட்டுமில்லாமல் ஹைதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துள்ளார். உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் அறிமுகமானவர். டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக வைத்துக் கொண்டு படத்தில் முழுநேரமாக நடிக்க ஆரம்பித்தார்.

டாக்டர் ஷர்மிளா:

டாக்டர் ஷர்மிளா விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர், இரவு 11 மணிக்கு மேல் டிவி சேனல்களில் வருபவர். சினிமா மற்றும் சீரியல்களில் அதிக ஆர்வம் காட்டியதால் டாக்டர் தொழிலை ஒதுக்கி வைத்து விட்டார்.

பவர் ஸ்டார் சீனிவாசன்:

அக்குபஞ்சர் டாக்டரான பவர் ஸ்டார் சீனிவாசன். லத்திகா என்ற படத்தை சினிமாவின் மேல உள்ள மோகத்தினால் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டார். கிட்டத்தட்ட 2000 நாட்கள் தாண்டி அந்த படம் ஓடியது (சீரியஸ் எடுத்துக்காதீங்க). செம காமெடி பீஸ்னா அது நம்ம பவர் ஸ்டார் தான்.

சினிமாவில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்று தன்னைத்தானே அசிங்கப்படுத்தி காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர். ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நான் தான் போட்டியாக வருவேன் என்று தன்னை தானே பீத்தி கொண்டவர் என்றே கூறலாம்.

அஜ்மல்:

அஜ்மல் அமீர் கோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இவர் தனது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் விருப்பம் இருந்ததால் டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக மாற்றி விட்டாராம்.

Related posts

துரோகத்துக்கான பலனை அனுபவிச்சே ஆகனும் – இமான்

nathan

நயனுக்கு பிறந்தநாள் பரிசாக விக்னேஷ் சிவன் கொடுத்த வாட்ச். விலைய கேட்டா ஆடிப் போவீங்க

nathan

அண்டவிடுப்பின் அறிகுறிகள்: ovulation symptoms in tamil

nathan

கலக்கலாக இருக்கும் ஜான்வி கபூர்

nathan

தங்கையை வன்கொ-டுமைச் செய்த அண்ணன்!!

nathan

சுதந்திர தினத்தை கொண்டாடிய லெஜெண்ட் சரவணன்

nathan

குக் வித் கோமாளி நண்பர்கள் புகைப்படங்கள்

nathan

என் கையை முதன் முதலில் பியானோவில் எடுத்து வைத்தது என் அக்கா தான்…

nathan

அடேங்கப்பா! இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா ..!

nathan