Image 3 1
அழகு குறிப்புகள்

பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் மீரா மிதுனின் மீது புகார் கொடுத்துள்ள ரவீந்திரன்!

ரவீந்திரன் பற்றி வனிதாவின் முண்றாவது கல்யாண விஷயத்தில் தான் அனைவரும் தெரிந்திருப்போம். அண்மையில் மீரா மிதுனும் தயாரிப்பாளர் ரவீந்திரனும் சேர்ந்து பேட்டி கொடுப்பதாக இருந்தது. இந்த சூழ்நிலையில், மீரா மிதுனின் இப்படியான காணொளியை பார்த்ததும் தயாரிப்பாளர் ரவீந்தரன் அந்த பேட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் , தயாரிப்பாளர் ரவீந்தரனை கோலிவுட் மாஃபியா மிரட்டியதால் தான் அவர் பேட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லியிருந்தார் மீரா மிதுன்.

இந்த சூழ்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீந்திரன் மீரா மிதுனை மட்டும் நேரில் கண்டால் கிழித்து தொங்க விட்டு விடுவேன் என்றும் அதற்கு பயந்து நான் ஏதோ பேட்டியில் பங்கு பெறவில்லை என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில் உன்னை நேரில் கண்டால் ஐம்பதாயிரத்தை கொடுத்து இனி நீ வாயைத் திறக்காது என்று சொல்லிவிடுவேன். என்று  காணொளியாக பதிவிட்டு வருகிறார். ஆனால் ஒரு மீடியாவில் அமர்ந்து என்னிடம் அவர் பேட்டியில் நேருக்கு நேர் பேசத் தயாரா என்று கேட்டிருந்தார்.

ரவீந்திரனின் இப்படியான பேட்டியை கண்ட மீராமிதுன் பேட்டியில் பங்கு பெறாமல் கோழைத்தனமாக ஓடி விட்டு இப்போது ஏன் ஏதோ தைரியமான ஆள் போல பேசுகிறீர்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ரவீந்திரன் உண்மையாகவே மீராமிதுன் பெயரில் 50,000 ரூபாயை எடுத்து அதனை புகைப்படமாக எடுத்து மீரானுக்கு ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார்.

இதற்கு பதில் அளித்துள்ள மீரா மிதுன், விமான நிலையத்தில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் கூறி இருந்தார் மீரா மிதுன். மேலும் நீ வந்து பேட்டி கொடுத்தால் மட்டும் தான் உனக்கு பணத்தை கொடுக்க முடியும். இல்லையென்றால் நீ எப்படி டிமிக்கி கொடுப்பார் என்பது தெரியும் வார்த்தைக்கு வார்த்தை நீ செலிபிரிட்டி என்று சொல்லிக் கொள்ளாத உன்னை வைத்து தமிழகத்தில் யார் படம் எடுப்பார்கள் என்பதை நான் பார்க்கிறேன். உன்னை வைத்து பாம்பே படம் எடுக்காது என்றும் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்.

மேலும், ஏற்கனவே பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் இவர் மீது ஒருவர் புகார் அளித்து இருக்கும் ஆதாரத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ரவீந்திரன்

Related posts

எப்பொழுதும் இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் சருமம்

nathan

உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள!…

sangika

கன்னத்தின் அழகு அதிகரிக்க……

nathan

தனுஷ் ஐஸ்வர்யா அதிரடி முடிவின் பின்னணி இதுதான்?சிம்புதான் காரணம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் வாழ்க்கை துணையிடம் எதிர்பார்ப்பது இத தாங்க…

nathan

எளிதாக நம் முகத்தில் உள்ள பருக்களை விரட்டி அடிக்கலாம்

nathan

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

nathan

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan

மெலிந்து போன நடிகர்… கண் கலங்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மோகன் லால்!

nathan