ஆண்களுக்கு

ஆண்களே! ஹேண்ட்சம் பாய் போல காட்சியளிக்க சில சிம்பிளான வழிகள்!!!

29 1435565228 6 facial
எப்படி பெண்களுக்கு மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளதோ, அதேப் போல் ஆண்களுக்கும் இருக்கும் தானே! அதிலும் திருமணமாகாத ஆண்கள் மட்டுமின்றி திருமணமான ஆண்கள் கூட பெண்கள் முன்பு அழகான ஆண்மகன் போன்று காட்சியளிக்க விரும்புவார்கள். அப்படி காட்சியளிப்பதற்கு அதிகமாக மெனக்கெட வேண்டாம்.

ஒருசில விஷயங்களை தவறாமல் பின்பற்றி வந்தாலே, அழகான ஆண்மகன் போன்று காட்சியளிக்க முடியும். எப்படி ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டுள்ளோமோ, அதேப்போன்று அழகின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.

இங்கு அழகான ஆண்மகன் போன்று காட்சியளிக்க சில சிம்பிளான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

தினமும் மாய்ஸ்சுரைசர்

சருமத்தின் pH அளவை சரியான அளவில் பராமரிப்பதற்கு, தவறாமல் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். இப்படி தடவுவதால், சருமம் வறட்சியடைவதைத் தடுத்து, சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

ஷேவிங்கிற்கு பதிலாக ட்ரிம் செய்யவும்

தமிழ்நாட்டு பெண்களுக்கு முழுமையாக ஷேவிங் செய்த ஆண்களைப் பிடிக்காது. மேலும் ஆண்கள் அளவான தாடி மற்றும் மீசையுடன் இருந்தால், எப்பேற்பட்ட பெண்ணையும் எளிதில் திரும்பிப் பார்க்க வைக்கலாம். எனவே ஷேவிங் செய்வதற்கு பதிலாக, ட்ரிம் செய்து பெண்களை கவருங்கள்.

சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்

வெளியே செல்லும் முன் மறக்காமல் சன்ஸ்க்ரீன் லோசனைத் தடவிக் கொண்டு செல்லும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் சருமம் முதிர்ச்சியான தோற்றத்தைத் தருவது தடுக்கப்படுவதோடு, சரும புற்றுநோய் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

கைகள் மற்றும் கால்களைப் பராமரிக்கவும்

ஹேண்ட்சம் பாய் என்ற பெயரைப் பெற வேண்டுமானால், கை மற்றும் கால்களில் உள்ள அழுக்கு புகுந்த நகங்களை வெட்டி, நன்கு சோப்பு போட்டு கழுவி சுத்தமாக காணப்பட வேண்டும். கை மற்றும் கால்விரல் நகங்களில் அழுக்குகளுடன் சுற்றினால், அது மோசமான எண்ணத்தை தான் உருவாக்கும். எனவே கை மற்றும் கால்களில் அதிக அக்கறை காண்பியுங்கள்.

நரைமுடியையும் அழகாக்குங்கள்

நரைமுடி தென்பட்டால், ஆண்கள் ஹேர்-டை அடிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் அப்படி ஹேர்-டை அடித்து உங்களை அழகாக காண்பிப்பதற்கு பதிலாக, இருக்கும் நரைமுடியுடனேயே அழகாக காணப்படலாமே! மேலும் ஹேர்-டை அடிப்பதால் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும். வேண்டுமெனில் நரைமுடியை மறைக்க இயற்கையான மருதாணியை பயன்படுத்துங்கள். இதனால் முடியின் ஆரோக்கியமும் மேம்படும், நரைமுடியும் மறைக்கப்படும். மேலும் நரைமுடி இருந்தால், நடிகர் அஜித் போன்று ஷாட்-கட் செய்து கொள்ளுங்கள்.

ஃபேஷியல்

அவ்வப்போது முகத்தின் புத்துணர்ச்சியை மேம்படுத்த ஃபேஷியல், மசாஜ், ஸ்கரப், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றைப் போட்டு வர வேண்டும். இதனால் முகத்தில் தங்கியிருந்த அழுக்குகள், கிருமிகள், இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

பளிச் பற்கள்

புன்னகையும் ஹேண்ட்சம் பாய் என்பதை வெளிக்காட்டும். எனவே தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட் உடன், சிறிது உப்பு தூவி பற்களை துலக்குவதோடு, ஆயில் புல்லிங், நாக்கை சுத்தம் செய்வது போன்றவற்றை செய்து வர வேண்டும். முடிந்தால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

நல்ல வாசனை

நல்ல நறுமணமும் மிகவும் முக்கியம். எனவே நல்ல வாசனைமிக்க சோப்பைப் பயன்படுத்துவதோடு, நல்ல டியோடரண்ட்டுகள் அல்லது பெர்ப்யூம்களைப் பயன்படுத்துங்கள். இதனால் வியர்வை துர்நாற்றமின்றி, நல்ல நறுமணத்துடன் இருக்கலாம். மேலும் இப்படி நல்ல நறுமணத்துடன் இருப்பது உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தையும் ஏற்படுத்தும்.

பலமுறை முகத்தை கழுவவும்

குளிக்கும் போது தவிர, மற்ற நேரத்தில் முகத்தைக் கழுவும் போது, சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக ஃபேஸ் வாஷைத் தான் பயன்படுத் வேண்டும். இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் முற்றிலும் நீக்கப்பட்டு, முகம் சுத்தமாக இருக்கும்.

நல்ல ஹேர் ஸ்டைல்

முக்கியமாக இது தான் முதன்மையானதாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், என்ன தான் மற்ற விஷயங்களில் நீங்கள் தோற்றுப் போனாலும், நல்ல ஹேர் ஸ்டைல் உங்களை அழகாகவும், ஸ்டைலாகவும் வெளிக்காட்டும். எனவே உங்களுக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுத்து பின்பற்றி வாருங்கள்.

Related posts

தாடி வளராமல் இருப்பதற்கு காரணம் என்ன?……..

sangika

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!

nathan

இந்திய ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 20 உணவுகள்!,tamil beauty tips for man

nathan

ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் !..

sangika

ஆண்களே! ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…mens tips in tamil

nathan

ஆண்கள் எப்படியெல்லாம் தங்களின் வழுக்கைத் தலையை மறைக்கலாம்?

nathan

ஆண்களே! மென்மையான தாடி வேண்டுமா? அப்ப இத தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan