உயிர் போனால் கூட பரவாயில்லை, மயிர் முக்கியம் என்ற அளவு ஆகிவிட்டது. ஏனெனில், உயிர் போகாது என்று தெரியும், ஆனால் மயிர் தான் அருவி போல கொட்டிக் கொண்டே இருக்கிறது. இன்றையக் கால இளம் ஆண்களின் பெரும் பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல் தான்.
என்ன செய்தாலும், தடுக்க முடியாத அளவு முடிக் கொட்டிக் கொண்டிருகிறது ஆண்களுக்கு. இதற்கு மன அழுத்தம், வேலை பளு, உறக்கமின்மை என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆயினும், நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகள் கூட இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது…
பொறித்த உணவுகள்
அதிகப்படியான கொழுப்பு உணவு, எண்ணெயில் பொறித்த உணவுகள் முடிக் கொட்டுவதற்கு பெரும் காரணமாக இருக்கின்றது. அதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு (Trans Fat) ஹார்மோன் நிலையை சீர்குலைத்து, முடி உதிர்தலை அதிகரிக்கிறது
காபைஃன்
அதிகப்படியாக காபிக் குடிப்பதாலும் கூட முடி உதிர்தல் அதிகரிக்குமாம். காபி அதிகமாக பருகுவதால் உறக்கம் குறைகிறதாம், சீரான உறக்கம் இல்லாவிட்டால் அதிகம் முடி உதிரும்.
சுகர்-ஃப்ரீ உணவுகள்
ஜீரோ கலோரி என்று விற்கப்படும் உணவுகளில் இருக்கும் செயற்கை இனிப்பூட்டி இரசாயனங்கள், முடியின் அடர்த்தியைக் குறைக்கிறது மற்றும் முடி உதிர்தலை அதிகமாக்குகிறது.
பேக்கேஜ் ஃபுட்ஸ்
பேக்கேஜ் உணவுகளில் கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் பதப்படுத்தும் இரசாயானங்கள், முடி உதிர்தலை அதிகரிக்கும்.
அதிகப்படியான வைட்டமின் ஏ
அதிகமாக வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை சாப்பிடும் போதும் கூட முடி உதிரும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், அதிகமான வைட்டமின் ஏ சத்து முடி உதிர்தலை அதிகரிக்க தூண்டுகிறது.
பிரெட், பிஸ்கட்ஸ்,
மற்றும் அதிகமாக பிரெட் கேக் மற்றும் பிஸ்கட்ஸ் போன்ற உணவுகளை உட்கொண்டாலும் முடி உதிர்தல் அதிகமாகுமாம்.
சாலை ஓர உணவுகள்
சுகாதாரமற்ற உணவுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் டைபாய்டு மற்றும் பிற உணவு சார்ந்த நோய்களை ஏற்படுத்தும். இவைகளின் காரணமாக முடி உதிர்தல் அதிகமாக வாய்ப்புகழ்க் இருக்கின்றன.