தேவையானவை
- வெள்ளரிக்காய்
- ஸ்பைரல் ஸ்லைசர் அல்லது கபாப் குச்சி
- கத்தி
- கட்டிங் போர்ட்
- கிச்சன் டவல்
செய்முறை
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வெள்ளரிக்காயைக் கழுவித் துடைத்து 6 அல்லது 7 சென்டிமீட்டர் நீளமாக நறுக்கவும். நடுவில் ஸ்பைரல் ஸ்லைசரின் கூர் முனையை நேராக உள்ளே அழுத்தவும்..
ஸ்லைசரை மெதுவே சுழற்றினால் புரிகள் (த்ரெட்) காயின் உள்ளே சென்று மறைந்துவிடும்.
ஒரு கையால் காயைப் பிடித்துக் கொள்ளவும். ஸ்லைசரின் வளையத்தில் மறு கை விரலை விட்டுப் பிடித்துக் கொண்டு, வளையம் தொடர்பு அறுந்துபோகாமல் கவனமாகச் சுழற்றவும்.
மெதுவாக சுருள் அமைப்பு உருவாக ஆரம்பிக்கும்.
முழுவதும் வெட்டி முடிந்ததும் உங்கள் விருப்பம் போல உணவை அலங்கரிக்கப் பயன்படுத்தலாம். இங்கு பயன்படுத்திய ஸ்லைசர் போல ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் ஸ்லைசர்கள் கிடைக்கும். அவை கடினமான காய்களையும் சுலபமாக வெட்டும். எண்கோண வடிவத்தில் கிடைக்கும் ஸ்பைரல் ஸ்லைசரைக் கையாளுவது இவற்றைக் கையாளுவதை விட எளிது. ஸ்பைரல் ஸ்லைசர் இல்லாமலே கூட இதுபோல வெட்டலாம். அதற்கு ஒரு மூங்கில் கபாப் குச்சியும் மெல்லிய கத்தியும் ஒரு பலகையும் இருந்தால் போதும்.
மீதமுள்ள காயின் நடுவே கபாப் குச்சு ஒன்றைச் சொருகவும்
பிறகு கத்தியைச் சற்றுச் சரிவாக வைத்து அழுத்தி, காயைச் சுழற்றவும்.
உருவாகும் சுருளை, கையால் மெதுவாகச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இடைவெளி சரியாக வருகிறதா என்பதையும் கவனித்துக் கொண்டே காயைச் சுழற்றியபடி வெட்டவும்.
தேவையான நீளத்திற்கு வந்ததும் குச்சியை நீக்கிவிட்டு ஸ்பைரலை நறுக்கி எடுக்கலாம்.
சுருளை சேர்ந்தாற் போல் பிடித்து இப்படியும் வைக்கலாம்.
கிடைக்கும் சுருள் அமைப்பை நீளமாக விரித்து வைத்தால் இப்படித் தெரியும்.
அதன் ஒரு ஓரத்திலிருந்து நான்கு சிறு துண்டுகள் வெட்டியெடுத்து இலைகள் தயார் செய்து கொள்ளவும். காம்புக்கு காயின் தோலில் நீளமாக ஒரு துண்டு வெட்டிக் கொள்ளவும்.
சுருளிலிருந்து ஒற்றை வட்டம் மட்டும் நறுக்கி எடுத்து சற்றுத் திருகினாற் போல் வைத்தால் இப்படித் தெரியும். இப்படியே தட்டைச் சுற்றி வைத்து அலங்கரிக்கலாம்.
சுருளைக் கொண்டு அமைத்த பூ வடிவம் இது. காம்பு மற்றும் இலைகள் வைத்து அலங்கரிக்கலாம்.
பிறகு கத்தியைச் சற்றுச் சரிவாக வைத்து அழுத்தி, காயைச் சுழற்றவும்