சைவம்

வெஜிடேபிள் புலாவ்

20 peaspulaorecipe

Ingredients

பீன்ஸ் -100 கிராம்
காரட் -100 கிராம்
உருளைக் கிழங்கு -2
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
இஞ்சி,பூண்டு விழுது-2 ஸ்பூன்
பச்சை மிளகாய் -5
கொத்தமல்லி தழை,புதினா தழை-சிறிது
பச்சரிசி அல்லது பிரியாணி அரிசி -2 கப்
தேங்காய் துருவல் -அரை மூடி (தேங்காய் அரைத்து பால் ஒரு கப் எடுத்து கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள் : எண்ணெய் அல்லது டால்டா -தேவையான அளவு பட்டை -2 கிராம்பு -2 பிரியாணி இலை -2 சோம்பு -1 ஸ்பூன்

Step 2

முதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் ,காரட் ,பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை மற்றும் சோம்பு தூள் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

Step 3

வதக்கிய பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய் ,பீன்ஸ்,காரட்,உருளை கிழங்கு,புதினா தழை,கொத்தமல்லி தழை,மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு காய்களை வதக்கவும்.வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.வதக்கிய பின்பு அரிசி,மூன்று கப் தண்ணீர் ,உப்பு தேவையான அளவு மற்றும் அரைத்த தேங்காய் பால்லை ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.இதோ வெஜிடேபிள் புலாவ் ரெடி.

Related posts

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

தேங்காய்ப் பால் வெந்தய சோறு

nathan

எள்ளு சாதம்

nathan

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

ரவா பொங்கல்

nathan

சில்லி காளான்

nathan

வடை கறி

nathan