36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

SJ சூர்யா செய்ய இருந்த காரியம்! விஜய்யின் குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவரா?

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் தவறி வேறு ஒரு நடிகருக்கு கிடைத்து அந்த படங்கள் பெரிய வெற்றியை பெற்று விடும். அப்படித்தான் குஷி பட வாய்ப்பு விஜய்க்கு கிடைத்துள்ளது.

தல அஜித்தின் வாலி படத்திற்கு செல்லும் முன்னரே குஷி படத்தின் கதையை ரெடி செய்து விட்டாராம் எஸ் ஜே சூர்யா. அப்போது தல அஜித்தின் ஒரு படம் சரியாக போகாததால் அந்த தயாரிப்பாளர் வாலி படத்தை எடுக்க முன் வரவில்லையாம்.

அப்போது எஸ் ஜே சூர்யா குஷி படத்தின் கதையை விஜய்க்கு சொல்லாமல் முதல் முதலாக இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் மகன் மனோஜ்ஜிடம் தெரிவித்துள்ளார். அவரும் சொந்த தயாரிப்பு மூலம் படப்பிடிப்புகளை தொடங்க ஏற்பாடு செய்துவிட்டார்.
ஆனால் எஸ் ஜே சூர்யா தல அஜித்தின் வாலி படத்தை முடித்துவிட்டுதான் புதிய படத்தை இயக்கப்போவதாக தெரிவித்துவிட்டாராம். இதனால் மனோஜ் குஷி படத்திலிருந்து விலகிவிட்டார்.

அதன்பிறகு தல அஜித்தின் வாலி படம் சூப்பர் ஹிட் அடிக்க உடனடியாக தளபதி விஜய்க்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்து குஷி கதையை சொல்லி ஓகே செய்து விட்டாராம் எஸ் ஜே சூர்யா.

குஷி படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. விஜய்யின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் குஷி என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..

nathan

இந்த எழுத்துக்களில் உங்கள் மனைவியின் பெயர் தொடங்கினால்

nathan

ஸ்ரீலங்காவில் விடுமுறையை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனி

nathan

கோயில் அருகே சிறுநீர் கழித்தது பற்றி கேட்ட சிறுவனை கார் ஏற்றி கொலை செய்தவர் கைது

nathan

எங்களை மேடம் என்று கூப்பிடுங்க… பூர்ணிமா மாயாவின் அடுத்த ஆட்டம்!

nathan

‘கயல்’ சீரியல் நடிகை மீனா குமாரி வீட்டில் நடந்த விசேஷம்!

nathan

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் ‘கயல் சீரியல்’ நடிகை

nathan

உடலில் அந்தரங்க பகுதிகளில் முடியை அகற்றுவது பாதுகாப்பானதா?

nathan

யாருக்கு நிறைவான வாரம்?

nathan