கற்றாழை, எலுமிச்சை சாறு, ரோஜா பூ மற்றும் புதினா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கற்றாழை ஆக்ஸிஜனேற்ற பண்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தினை நீரேற்றத்துடனும் மற்றும் ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது.
அத்துடன் முகங்களில் இருக்கும் நேர்த்தியான கோடுகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு வடுக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தினை சரி செய்கிறது.
எலுமிச்சை சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. ரோஜா பூக்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சருமத்தினை புத்துணர்ச்சி பெறச் செய்து மென்மையானதாக மாற்றுகிறது. புதினா பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தினை நீரேற்றமாக வைத்து ஆரோக்கியமான சருமத்தினை ஊக்குவிக்கிறது.
ஒரு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு ஒரு சில ரோஜா இதழ்கள் மற்றும் சிறிதளவு புதினா இலைகள் எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் சிறிதளவு தண்ணீர் வைத்து புதினா இலைகள் மற்றும் ரோஜா பூக்களின் இதழ்களைப் போட்டு கொதிக்க வையுங்கள். பின்பு அந்த நீரினை வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கற்றாழை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஸ்பிரே செய்யுங்கள். நாள் முழுவதும் தேவைப்படும் போது இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.