நீங்கள் தோல் பராமரிப்பு பற்றி கொஞ்சம் அறிந்தவராக இருந்தால், வைட்டமின் சி மிகவும் பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எப்படியிருந்தாலும், இது உங்கள் தோல் பராமரிப்பு துயரங்களில் சிலவற்றைத் தீர்க்க உதவும் – நேர்த்தியான கோடுகள் முதல் தளும்புகள், சோர்ந்த தோற்றம் மற்றும் முகப்பரு வடுக்கள் வரை அனைத்தையும் தீர்க்கும். எனவே, வெப்பநிலை உயர்ந்து வருவதால், இந்த தோல் பராமரிப்புப் பொருளை நம் வழக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த எளிய வீட்டில் தயாரிக்க கூடிய வைட்டமின் சி சொறிவூட்டப்பட்ட முகப்பூச்சு பற்றி பார்ப்போம்.
நீங்கள் சுவை மிகுந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது, அதன் தோலை தூக்கி எறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தோலை நன்றாக கழுவி குறைந்தது 2 நாட்களுக்கு சூரிய ஒளியில் நன்றாக காய வைக்கவும். அடுத்து அதை அறைத்து நன்றாக பொடி செய்து கொள்ளவும்
கோடை காலம் வந்து விட்டது; உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள்
ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு பொடியை எடுத்து அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து அதை உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளவும். உங்கள் கழுத்துப் பகுதிகளிலும் பூச மறந்துவிடாதீர்கள். இதை 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். உகந்த பயனைப் பெற இந்த முகப்பூச்சை வாரத்துக்கு இரண்டு முறை பூசவும்.
கொலாஜன் (collagen) உற்பத்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி நன்கு அறியப்படுகிறது. மேலும் sunspots, age spots, மற்றும் melasma ஆகியவற்றை உள்ளடக்கிய அசாதாரணமாக முகம் கருமை அடைவதை கையாள்வதிலும் இது உதவுகிறது. தேன் மற்றும் மஞ்சள் ஆகியவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன எனவே அவை நச்சுகளை அகற்ற உதவுகிறது. தயிர் உங்கள் சருமத்தை எண்ணெய் பிசுக்காக மாற்றாமல் பிரகாசமாகவும் ஈரப்பதமாகவும் மாற்ற உதவுகிறது.
நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில DIY தோல் பராமரிப்பு தயாரிப்புகள் இங்கே
பயனுள்ள DIY ஸ்க்ரப்களை உருவாக்க எளிதாக கிடைக்கக்கூடிய சமையலறை பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது.
உதடு வெடிப்புகள்? வீட்டில் உங்கள் சொந்த லிப் பாமை (lip balm) செய்யுங்கள்
இந்த DIY wax மூலம் உங்கள் முடி துயரங்களை நீக்குங்கள்; அதை இங்கே பார்க்கலாம்
DIY முக தாள் முகமூடியை (face sheet mask) நீங்கள் எவ்வாறு உருவாக்கலாம்
வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த முக பூச்சுக்கள் உங்கள் சருமத்தை ஒளிர வைக்கவும்
இந்த முக பேக்கை முயற்சிக்கலாமே…