30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
fair skin 26 1514274888
முகப் பராமரிப்பு

பெண்களே…. முகத்தை வெண்மையாக்கி, பொலிவை தரும் அற்புதமான பேஸ் பேக்!!!!

உடனடியாக முகத்தில் இருக்க கூடிய கருமைகளை நீக்கி விட்டு பளபளப்பான, சிகப்பழகோடு சருமத்தை பாதுகாக்கும் ஒரு டிப்ஸை தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம். இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருமே பயன்படுத்தலாம். மேலும் இது எல்லா வகையான சருமம் கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

இதனை செய்வதற்கு நாம் பன்னீர் ரோஜா இதழ் பொடியை பயன்படுத்த போகிறோம். இது அனைத்து ஆர்கானிக் கடைகள் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு வேலை இது உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் ஃபிரஷான ரோஜா இதழ்களை அரைத்து அதன் விழுதினை கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

சுத்தமான ஒரு பவுல் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு பன்னீர் ரோஜா இதழ் பொடியை சேர்த்து கொள்ளவும். அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு கற்றாழை சாறு சேர்த்து கொள்ளுங்கள். கற்றாழை ஃபிரஷாக இருந்தால் சிறப்பு. உங்களுக்கு ஃபிரஷாக கிடைக்காத பட்சத்தில் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி கொள்ளலாம்.

அடுத்து இதில் நாம் கலக்க போகும் முக்கியமான பொருள் காய்ச்சாத இரண்டு தேக்கரண்டி பால். இப்போது இவை அனைத்தையும் கட்டிகள் எதுவும் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்கள் சருமம் எண்ணெய் சருமமாக இருந்தால் இதனோடு 1/2 தேக்கரண்டி முல்தானி மட்டி பொடியும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதனை முகத்தில் பயன்படுத்தும் முன்பாக முதலில் முகத்தை நன்றாக கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். பிறகு இதனை கொஞ்சமாக எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யுங்கள். தடவிய பிறகு பத்து நிமிடங்களுக்கு பின் மீண்டும் ஒரு முறை மசாஜ் செய்து கொள்ளவும். இதனை காய விட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

முகத்தை கழுவும் போது எந்த விதமான சோப்போ அல்லது பேஸ் வாஷோ கொண்டு முகத்தை கழுவ கூடாது. வெறும் தண்ணீர் கொண்டு மட்டுமே கழுவ வேண்டும். அப்போது தான் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். ஏதேனும் ஒரு விசேஷத்திற்கு நீங்கள் செல்ல இருந்தால் முந்தைய நாள் இரவு மற்றும் காலையில் இந்த பேஸ் பேக்கை போட்டு கொண்டால் போதும்.

உங்கள் முகத்தில் உள்ள கருமை அத்தனையும் மறைந்து, பொலிவான, அழகான, வெள்ளையான சருமத்தை பெறுவீர்கள். அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் முகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய அற்புதமான பேஸ் பேக் இது. கண்டிப்பாக இதனை நீங்கள் முயற்சி செய்து பார்த்து பலன் அடையுங்கள்.

Related posts

சுருக்கங்கள்

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக்

nathan

உங்கள் மேக்கப் கச்சிதமா வரனும்னு ஆசையா? இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணிப் பாருங்களேன்!!

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

இயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

nathan

ஜொலிக்கும் அழகிற்கு வீட்டில் நீங்களே செய்யும் பேரிச்சம்பழ ஃபேஸ் மாஸ்க்

nathan

முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

இந்தியப் பெண்கள் மூக்குத்தி அணிவதன் முக்கியத்துவம் என்ன?தெரிஞ்சிக்கங்க…

nathan

“ப்ரிஜ்ஜில் வைத்த’ முகம் வேண்டுமா?

nathan