26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
அழகு குறிப்புகள்முகப்பரு

பருக்களை தடுத்து சருமத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

ld594-300x150

வேப்பிலை ஒரு கிருமிநாசினி. இந்த வேப்பிலையானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இது பல சரும நோய்கள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. இந்த வேப்பிலையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் செய்வதென்று பார்க்கலாம்.

• கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் அதன் இலையை அரைத்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 – 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

• முகப்பரு இருப்பவர்களுக்கு வேப்பிலை பவுடருடன், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், இரண்டு நாட்களில் பருக்கள் படிப்படியாக குறைய தொடங்கும்.

• வேப்பிலையை நன்கு அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த ஒரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கினால், இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதை தடுக்கும். வேண்டுமெனில் இதனை பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.

• சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேப்பிலை பொடியுடன் பால், எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• ஒரு பௌலில் வேப்பிலைப் பொடி, துளசி பொடி மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, நன்கு ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தடுத்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்

Related posts

நள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி… கணவனுக்கு நேர்ந்த சோகம்!

nathan

லிப்ஸ்டிக் போடாமல் இயற்கையாக உங்கள் உதடு சிவப்பாக இருக்கணுமா?

nathan

உங்க தளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற சூப்பர் டிப்ஸ்…

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு சரும பிரச்சனைகளை தடுக்க தினமும் கற்றாழை ஜெல்!

nathan

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

கன்னம் இருந்தால் இளமையாகவும், அதிக கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்!….

sangika

வழுக்கை வராமல் தடுக்க

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

தேங்காயில் இருக்கும் பூவை உண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan