நம் எல்லோரும் விரும்புவது நம் முடியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதேபோல் மிகவும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை கொள்ளுவதும் உண்டு. இதனால் நம் செய்யும் சில விஷயங்கள் நமக்கே ஆபத்தாக வந்து முடியும். அப்படி உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் பல விஷயங்கள் உங்கள் முடிக்கு கேடு விளைவிக்க கூடியதாக அமைந்து விடும்.
உங்கள் முடியை வாரத்திற்கு எத்தனை முறை அலசுகிறீர்கள், எவ்வாறு அலசுகிறீர்கள் என்பது கூட மிக முக்கியம் தான். உங்கள் முடிக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சரி, உங்களுக்கே தெரியாமல் உங்கள் முடி கொட்டுவதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்.
முடியை அலசுதல்
உங்கள் முடியை அதிகமான அளவில் அலசுதல் அல்லது குறைவான அளவில் அலசுதல் இரண்டும் நல்லது அல்ல. நீங்கள் நினைக்கலாம் அதிக அளவில் அலசும் போது முடி சுத்தமாக மாறுமென்று ஆனால் அதிக அளவில் அலசும் போது உங்கள் முடி உடையக்கூடியதாக மாறிவிடும். மேலும் குறைவான அளவில் அலசும் போது அழுக்குகள் வெளியேறாமல் மேலும் அழுக்குகளை உள்வாங்கி எண்ணையுடன் மாறுகிறது. வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை ஷாம்பூ உபயோகிக்கலாம்.
சூடு தண்ணீர்
நீங்கள் குளிக்கும் போது அதிக வெப்ப நிலையில் உள்ள தண்ணீரை கொண்டு முடியை அலசுவது தவறு. இது உங்கள் முடியை சேதமடைய செய்யும். முடிகளில் வெட்டுகளை எற்படுத்தும். எனவே மிதமான சூட்டில் உள்ள நீரை பயன்படுத்தி முடியை அலசுங்கள். மேலும் ஹேர் ட்ரையர்களை பயன்படுத்தும் போது சரியான அளவில் வைத்து பயன்படுத்துங்கள்.
கண்டிஷனர்
கண்டிஷனர் பயன்படுத்தும் போது உங்கள் முடியின் நடுப்பகுதியில் இருந்து கீழ்பகுதி வரை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் அடிபகுதியில் உள்ள முடிகள் வெகு நாட்களுக்கு முன்பே வளர்ந்த ஒன்றாகும். இதனால் அவற்றை மட்டும் நீங்கள் கண்டிஷனர் செய்தால் போதுமானது. உங்கள் முடிக்கு தேவையான அளவு மட்டும் கண்டிஷனர் உபயோகிப்பது சிறந்தது.
ஈரமான முடி
ஈரமான கூந்தல் கனமானது மட்டுமல்ல. மிகவும் மென்மையானது. எனவே ஈரமான கூந்தலை நீங்கள் வாரும் போது உடைந்து விடும். நீங்கள் உங்கள் முடியை வாருவது என்றால் குளிக்க செல்லும் முன்போ அல்லது குளித்து முடித்து முடி காய்ந்த பிறகு தான் வார வேண்டும்.
துண்டு பயன்படுத்துதல்
உங்கள் உடலுக்கு ஒரு துண்டை பயன்படுத்துவது போல உங்கள் தலை முடியை காய வைப்பதற்கும் ஒரு துண்டை பயன்படுத்துங்கள். உங்கள் முடியை இழுக்காதீர்கள். மெதுவாக துண்டை பயன்படுத்தி காயவையுங்கள். உங்க முடியை தலைகீழாக அல்லது வலதுபுறமாக போட்டு துவட்டுவது நல்லது. இப்படி செய்வதால் முடியில் உள்ள ஈரம் சீக்கிரமாக வெளியேற உதவும்.
பின்னுதல்
நீங்கள் பின்னவோ அல்லது போனிடைல் போடவோ நினைத்தால் முதலில் உங்கள் முடி காய்ந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முடி ஈரமான நிலையில் இருக்கும் போது அவற்றை பின்னுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சிறிது சீரம் பயன்படுத்தி விட்டு சற்று காய்ந்த பிறகு ஒரு தளர்வான பின்னல் பின்னிக் கொள்ளலாம்.
முடி வெட்டுதல்
முடி வெட்டுதல் என்பது குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் முடியின் அடிப்பகுதியை வெட்டுவது அவசியமாகும். இது பூச்சிவெட்டுகளை அகற்ற உதவும். ஆனால் மற்ற முடி வெட்டும் முறைகளை நீங்கள் வீட்டில் செய்வது தவறு. முடி வெட்டுவதற்கு தேவையான சிறிதளவு பயிற்சி கூட இல்லாமல் அதை நீங்கள் முயற்சி செய்யக் கூடாது. இப்படி செய்வதால் நீங்கள் எதிர்பார்த்த பாணியை அடைய முடியாமல் போகும்.