24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கும் வழிகள்

கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கும் வழிகள்
கூந்தல் எண்ணெய் பசையோடு இருப்பதற்கான முதல் காரணம், உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பியில் அளவுக்கு அதிகமான அளவில் எண்ணெய் சுரப்பதே ஆகும். அந்த பொருளுக்கு செபம் என்று பெயர். எண்ணெய் சுரப்பில் அந்த செபம் என்னும் பொருள் அதிகமாக சுரப்பதால், ஸ்கால்ப் மற்றும் கூந்தல் அதிகமாக எண்ணெய் பசையோடு காணப்படுகின்றன.இதனை உடனே முழுவதும் சரி செய்துவிட முடியாது. ஆகவே அத்தகையவர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம். அதிக அளவில் எண்ணெய் பசையுள்ள உணவுகளை உண்பதால், அதில் உள்ள எண்ணெய் உடலில் சென்று அதிக அளவில் எண்ணெயை வெளிப்படுத்துகிறது.

அதிலும் இத்தகைய எண்ணெய் கூந்தலில் மட்டும் வெளிவராமல், உடல் முழுவதுமே வெளிவருகிறது. ஆகவே எந்த உணவை உண்டாலும் அளவோடு உண்ண வேண்டும். அடிக்கடி வெளியே செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆகவே வெளியே இருக்கும் மாசடைந்த சுற்றுச்சூழலால், கூந்தலில் அழுக்குகள் புகுந்து, தலையில் படிந்துவிடுகின்றன.

இதனால் தலையை மற்றும் கூந்தலைப் பார்த்தால், எண்ணெய் பசையோடு இருக்கும். எனவே கூந்தலுக்கு ஷாம்பு போட்டு, தினமும் அல்லது ஒரு நாள் விட்டு குளித்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். வண்டிகளை ஓட்டும் போது, அதில் இருந்து வரும் புகையில் ஒரு குறிப்பிட்ட அளவில் எண்ணெய் பொருள் உள்ளது.

ஆகவே அது கூந்தலில் படுவதால், கூந்தல் வறண்டு, அதிக எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. ஆகவே அவ்வாறு செல்பவர்கள், தலையில் ஏதேனும் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் தினமும் ஹெர்பல் ஷாம்புவை போட்டு குளிக்க வேண்டும். எனவே அந்த எண்ணெய் பசையை ஈஸியாக தடுக்கலாம்.

Related posts

natural hair dye in tamil – இயற்கை முடி சாயம்

nathan

கோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்வதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

வெள்ளை முடியால் உங்களுக்கு கவலையா?

nathan

உங்களுக்கு தெரியுமா சொட்டை விழறதுக்கு வேற எதுவுமே காரணமில்ல….

nathan

பொடுகு பிரச்சனையால் றொம்ப அவதி படுகிறீங்களா;அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களது கூந்தல் அதிகமாக கொட்டுகின்றதா

nathan

தலைமுடி நரைப்பதைத் தடுக்க முடியும்..

nathan

கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹேர் பேக்குகள்!

nathan