அழகு குறிப்புகள்

கவரிங் நகைகள் வாங்கும் போது

கவரிங் நகைகள் வாங்கும் போது

நாம் எவ்வளவு தான் தங்க நகை வைத்திருந்தாலும் விதவிதமான கவரிங் நகைக்கு பல நூறுகள் செலவு செய்து வாங்கத்தான் செய்கிறோம். ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் இவை வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு. அப்படி வாங்கிய கவரிங் நகை சில நாட்களில் கறுக்கத் தொடங்கிவிடும். இதனை வாங்கிய கடையில் கொடுக்கவும் முடியாது,

நாம் அணிந்து கொள்ளவும் முடியாது. இப்படி வீணாகிப் போவதைத் தடுக்க ஒரு நல்ல திட்டம் உள்ளது. புதிதாக கவரிங் நகை வாங்கியவுடன் அதன் மீது நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் கொடுக்கவும். அதாவது நிறமில்லாத நெயில்பாலிஷ் வாங்கி அதனை உங்கள் நகை மீது தடவி வைக்கவும். இப்படி செய்வதால் நகை தண்ணீரில் பட்டு வெளுத்துப் போவது தவிர்க்கப்படும்.

எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். பொதுவாக தங்க நகைகளை விட கவரிங் நகைகளை பத்திரமாக பாதுகாத்தால் அதிக நாட்களுக்கு வைத்திருந்து அணிந்து கொள்ளலாம். கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். கவரிங் நகையும் கெட்டுப் போகும்.

கவரிங் நகைகளை அணிந்து விட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.இப்படி செய்வதால் கவரிங் நகையில் ஊறி இருக்கும் உங்கள் வியர்வை அகற்றப்படும். நகை கறுக்காமல் இருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வால்நட்ஸ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள்!

nathan

அழகு குறிப்புகள்,அழகுடன் திகழணுமா?,beauty tips tamil

nathan

அடேங்கப்பா! விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

nathan

உண்மையை உடைத்த அனிதா சம்பத்!என்னை தவறான உறவுக்கு அழைத்தார்கள் –

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..’பரு’வப் பிரச்சினையா?

nathan

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே பாத வெடிப்பை போக்கலாம்

nathan

குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு ஓர் எளிய இயற்கை மருத்துவம்!…

sangika

மனம் திறந்த விக்கி! ரெண்டு புள்ளைக்கு அப்பான்னு என்னாலே நம்ப முடியல

nathan

கத்திற்கு பிளீச்சிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பிரச்சனை வருமா?

nathan