31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் மருக்களா? இதை தடவினால் போதும்- ஐந்தே நாட்களில் தீர்வு

நமது சருமத்தில் மருக்கள் வந்தாலே பார்க்கவே அருவருப்பாக இருக்கும்.

இந்த மருக்கள் கழுத்து, மார்பு, முகம் போன்ற இடங்களில் அதிகமாக வரும்.

இந்த மருக்கள் அழகை கெடுப்பது போல் இருக்கும்.

இவற்றை போக்க உதவும் சில இயற்கை வழிகளை பார்ப்போம்.

ஒரு துண்டு வெங்காயத்தை எடுத்து, அதில் சிறிதளவு உப்பு தேய்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் உப்பு தேய்த்த வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் மருக்கள், தழும்புகள் சரியாகும்.
கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அதை தினமும் மருவின் மேல் வைத்து கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மரு மறையும்.
எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து மரு இருக்கும் இடத்தில் தடவி 20-25 நிமிடம் வரை ஊற வைத்து பின் கழுவி வந்தால் மருக்கள் சீக்கிரம் போய்விடும்.
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு காட்டனில் எடுத்து மரு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் மரு சீக்கிரம் உதிர்ந்து விடும்.
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, மரு இருக்கும் இடத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தேய்த்து வந்தால் மருக்கள் உதிர்ந்துவிடும்.
பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியை கொண்டு கட்டி 25 நிமிடம் ஊற வைத்து, அதன் பின் கழுவினால் நல்ல மாற்றம் தெரியும்.
கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும்.மேலும் மருக்கள் வளராமலும் தடுக்கும். கற்பூர எண்ணெய் இல்லாவிட்டால் கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்தும் பூசலாம்.
சுண்ணாம்பை நன்றாக குழைத்து, மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.
கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அந்த ஜெல்லை ஆறிலிருந்து ஏழு முறை வரை நன்றாக கழுவி, பின் அதனை மரு இருக்கும் இடத்தில் தினமும் தடவி வர மரு இருந்த இடம் தெரியாமல் போகும்.
ஆளி விதையை எடுத்து அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் உதிர்ந்து விடும்.

Related posts

வாரம் ஒருமுறை இந்த மாஸ்க்கை போட்டால், முக சுருக்கங்கள் மாயமாய் மறையும் என தெரியுமா!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆண் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் சுரக்கும்போது அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?

nathan

உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் பழங்கள் என்ன தெரியுமா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அடர்த்தியான புருவத்திற்கு இயற்கை வழிமுறைகள்

nathan

‘பளீச்’ஜொலிப்புக்கு வீட்டிலேயே தீர்வு

nathan

பளிச்சென முகம் பிரகாசிக்கbeauty tips tamil for face

nathan

ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?

nathan

பெண்களே உங்கள் முகத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை நாங்க சொல்றம்…!

nathan

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan