27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Tamil News Home facial SECVPF
முகப் பராமரிப்பு

கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா? வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க

கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்று கவலைப்படும் பெண்கள் வீட்டிலேயே எளிய முறையில் ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

பியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா? வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க
வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க
கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள், பெண்கள் முகத்தை பராமரிக்க பார்லர்தான் செல்ல வேண்டும் என்றில்லை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பார்லருக்கு நிகரான அழகுப் பராமரிப்பு, பொலிவையும் மீட்டெடுக்க முடியும்.

முதலில் பிசுக்கை போக்க காய்ச்சாத பாலை பஞ்சில் நனைத்து முகம், கழுத்தை துடையுங்கள்.

ஈரம் காய்ந்ததும் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன் மற்றும் தேன் 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் வெளியேறும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.

கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் என எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். தற்போது கொஞ்சம் எடுத்து முகத்தில் தேய்த்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்களுக்கு இப்படி செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின் நீரில் கழுவி விடுங்கள்.

கடலை மாவு 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பால் – 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்குக் கலக்குங்கள். முகத்தில் இந்த பேஸ்டை அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். இறுதியாகா கழுவும் முன் கொஞ்சம் தண்ணீர் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்துவிட்டுக் கழுவுங்கள்.

தற்போது உங்கள் முகம் முன்பை விட பளபளப்பாக ஜொலிப்பதை உணரலாம்.

-maalaimalar

Related posts

10 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்கும் அற்புத மாஸ்க்!

nathan

மாஸ்க்கை பயன்படுத்துவது எப்படி?

nathan

பெண்களே வெள்ளையாகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த பருவ காலத்தில் சில எளிய வீட்டு பராமரிப்பு முறை

sangika

உங்க முகம் குண்டா அசிங்கமா இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

மழைக்காலத்தில் சருமம் அழகா இருக்கணுமா?

nathan

நடுத்தர வயது பெண்களின் அழகு பராமரிப்புக்கு.

nathan

வீட்டிலேயே ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி?

nathan

சரும நிறத்தை அதிகரிக்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan