32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்புகை பராமரிப்பு

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

11045433_943670355671098_7340305930344304226_n

சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று முகத்திற்கு மட்டும் அதிகப்படியான பராமரிப்பை மேற்கொள்வார்கள். கைகள் மற்றும் கால்களை கண்டு கொள்ளவேமாட்டார்கள். இதனால் முகம் ஒரு நிறத்திலும், கை மற்றும் கால்கள் ஒரு நிறத்திலும் இருக்கும்.

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க… இப்படி இருந்தால், அதற்கு பெயர் அழகு இல்லை. எனவே உங்கள் தலை முதல் கால் வரை ஒரே மாதிரியான நிறத்தில் இருக்க வேண்டுமெனில், வெளியே வெயிலில் செல்லும் போது, முகம், கை, கால் போன்றவற்றிற்கு போதிய பராமரிப்புக்களை மேற்கொள்வதோடு, சூரியக்கதிர்கள் சருமத்தை தாக்காதவாறு பாதுகாக்க வேண்டும்.

வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!! இங்கு சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தால் கருப்பான கை மற்றும் கால்களின் நிறத்தை வெள்ளையாக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் கை மற்றும் கால்களையும் முகத்தின் நிறத்திற்கு பராமரிக்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அதனை கை மற்றும் கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த பின் மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமையைப் போக்கலாம்.

தயிர்

தயிர் சருமத்தை மென்மையாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதிலும் அந்த தயிருடன் கடலை மாவு, வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், கருமைகள் அகலும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லிற்கு சருமத்தில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் சக்தி உள்ளது. மேலும் இதற்கு சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது. எனவே கற்றாழை ஜெல்லை தினமும் கால்கள் மற்றும் கைகளில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், கைகள் மற்றும் கால்கள் கருமையடையாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை கைகள் மற்றும் கால்களில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை மற்றும் வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.

கடலை மாவு

கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றிவிடும். எனவே ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவை போட்டு, தயிர் ஊற்றி பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் மற்றும் மஞ்சள் தூள்

வெள்ளரிக்காய் சாற்றில், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமை அகலும்.

சந்தனம்

சந்தனப் பொடியைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் இளமையுடன் பொலிவாக காட்சியளிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Related posts

வரிசு படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட மீட் பார்ட்டி வெற்றி – இத்தனை சக்சஸ் பார்ட்டி!!!

nathan

சரும சுருக்கத்தைப் போக்கும் விளக்கெண்ணெ!!!

nathan

முகத்தில் முடி அரும்பி வளருகிறதா

nathan

அழகான தோற்றம் பெற ஆயில் மசாஜ்

nathan

கன்னத்தின் அழகு அதிகரிக்க……

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

அழகு உங்கள் கையில்

nathan

நகங்கள் உடைந்து போகிறதா…

nathan

அடேங்கப்பா! மூன்று ஆண்டுகளுக்கு பிறகுபிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை!

nathan