27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
2 157
முகப் பராமரிப்பு

தெரிஞ்சிக்கங்க…ஆண் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் சுரக்கும்போது அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?

பி.சி.ஓ.டி அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளினால் இரத்த ஓட்டத்தில் ஆண்ட்ரோஜன்களின் அளவை அதிகரிக்கிறது. இந்த ஆண்ட்ரோஜனின் உயர்ந்த அளவு கருப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகளை உருவாக்குகின்றன. இந்த நீர்க்கட்டிகள் தீங்கு விளைவிப்பவை அல்ல.

ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதால் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு, அதிகப்படியான முக முடிகள், தடிப்புகள் மற்றும் சருமத்தின் கருமை மாற்றம் போன்றவை ஏற்படும். இதனையே பி.சி.ஓ.டி என்று அழைக்கின்றோம். பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன்கள் சுரப்பதால் இவ்வாறான மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே பி.சி.ஓ.டி-யால் ஏற்படும் சரும பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அழகுக் குறிப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

முகப்பரு

ஆண்ட்ரோஜனின் அளவு அதிகரிப்பதால் சருமத்தில் அதிக இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைவெளி முகத்தில் முகப்பருக்களை உண்டாக்குகின்றன. எனவே உங்கள் முகங்களை கழுவுவதற்கு சாலிசிலிக் அமிலம் அல்லது கிளைகோலிக் அமிலம் கொண்ட ஒரு பேஸ் வாஷினை பயன்படுத்துங்கள். இவை சரும உற்பத்தியைக் குறைத்து சரும இடைவெளியை அகற்றி முகப்பருக்களைத் தடுக்கின்றன.4 15

முக முடிகள்

முகப்பரு ஏற்படுவதுடன் ஆண் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும் போது முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சியினை ஏற்படுத்துகிறது. முகப்பருக்களை விட முகத்தில் ஏற்படும் முடிகளைச் சமாளிப்பது சற்று கடினம் தான். இதற்கு நீங்கள் லேசர் முடி அகற்றுதல் முறையைப் பின்பற்றலாம் ஆனால் இது சற்று விலையுயர்ந்த ஒன்றாகும். பி.சி.ஓ.டி யின் போது வளரும் முடிகள் வழக்கமான முடிகளை விடக் கடுமையானதாகவும் மற்றும் வேகமானதாகவும் வளரும். எனவே எப்போதும் உங்கள் கைகளில் டீவீஸிர் வைத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் சருமம்

பி.சி.ஓ.டி உள்ளவர்களுக்கு எண்ணெய் சருமம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் எண்ணெய் சருமத்தைச் சரி செய்ய ஆயில் ப்ளோட்டிங் காகிதம் உங்களுக்கு உதவும் அல்லது தேயிலை மர எண்ணெயைக் கொண்டிருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகத்தில் ஏற்பட்ட துளைகளை அடைத்து எண்ணெய் வடிதலைக் கட்டுப்படுத்துகிறது.

கருமை நிற திட்டுகள்

இரத்தத்தில் இன்சுலின் அதிக அளவில் இருப்பதால் கருமை நிற திட்டுகள் ஏற்படுகின்றன. இந்த கருமை நிற திட்டுகள் சருமம், தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதி, கழுத்தின் பின்புறம், மார்பகங்களின் கீழ்ப் பகுதி போன்ற இடங்களில் ஏற்படுகின்றன. இவற்றைக் குறைப்பதற்கு ஒரே வழி இன்சுலின் நிறைந்த பொருட்களைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் சில வெள்ளையாகும் கிரீம்களை வாங்கி பயன்படுத்தலாம். பி.சி.ஓ.டி உள்ளதால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விட்டு கிரீம்களை பயன்படுத்துங்கள்.

கரடுமுரடான சருமம்

ஆண் ஹார்மோன்களின் அதிகப்படியான சுரப்பு உங்கள் சருமத்தைத் தடிமனாகவும் மற்றும் கடினமாகவும் மாற்றும். இதனால் உங்கள் சருமத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சருமத்தை அடிக்கடி ஸ்க்ரப்பிங் செய்வது அவசியம். இதனால் உங்களுக்கு வைட்ஹெட்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸ் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

கருமை நிற அக்குள்

உங்களுக்கு கருமை நிற அக்குள் இருந்தால் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை கலந்த கலவையைப் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா பாக்டீரியாக்களை அகற்றுவதற்கும் எலுமிச்சை சாறு மென்மையான மற்றும் இயற்கையான ப்ளீச்சிங் ஆகவும் செயல்பட்டு கருமையை நீக்க உதவும். இது உடனடியாக உங்களுக்குப் பதிலளிக்க விட்டாலும் மெது மெதுவாக உங்களுக்கு உதவும்.

முடி உதிர்தல்

பி.சி.ஓ.டி-யினால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முடி வளர்ச்சியைத் தடுத்து முடி கொட்டுதலை ஏற்படுத்துகிறது. எனவே சல்பேட்டுகள் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். முடியை அலசும் போது ஆர்கானிக் நிறைந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள் ஆனால் அடிக்கடி முடியை அலசாதீர்கள்.

Related posts

கண்ணிமை அடர்த்தி பெற வீட்டிலேயே சுலபமாக மஸ்காரா தயாரிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா ஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா?

nathan

த்ரெட்டிங் செய்த பின் பிம்பிள் வருகிறதா? அதைத் தடுக்க சில வழிகள்!!!

nathan

உங்க முகம் பளபளக்க எளிய ஃபேஸ் வாஷ்! அதிக செலவு இல்லை…

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan

முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

nathan

பழவகை ஃபேஷியல்

nathan

கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள். எப்படி மீளலாம்

nathan

நீங்களே சொந்தமாக உங்களுக்கான கேரட் சோப்பை எவ்வாறு தயாரிப்பது……

sangika