29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
3 157

தெரிந்துகொள்வோமா? கர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா? அது பாதுகாப்பானதா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் என்று தனியா தனியாக பட்டியல் போடப்பட்டு அது பின்பற்றப்படுகிறது. ஏனென்றால் கர்ப்ப காலத்தில் உடல் நிலையில் மாற்றம், மன நிலை மற்றும் உணர்ச்சிகளில் மாற்றம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய உணவு முறையில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒவ்வாமையுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்களை மட்டும் அல்லாமல் கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்.

கர்ப்பமாக இருக்கும்போது வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களைச் சாப்பிடுவது குழந்தைக்குப் பாதுகாப்பானதாக இருக்குமா என்பது அனைவரின் கவலை. மேலும், கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடலாமா? கூடாதா? என்பது பற்றி இங்கு நிறைய விவாதமும் போய்க்கொண்டிருக்கிறது. சில மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவதுதான் இதற்கு காரணம். வேர்க்கடலையை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் அந்த வேர்க்கடலையை அளவாக தான் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக உப்பு நிறைந்த வேர்க்கடலையை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வேர்க்கடலையை பச்சையாகச் சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. இதனால் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.

வேர்க்கடலையின் பயன்கள்

வேர்க்கடலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக வேர்க்கடலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு நிறையப் பலன்கள் கிடைக்கின்றன. கர்ப்பிணிப்பெண்கள் சாப்பிடுவது இன்னும் அதிக பலன்கள் கொடுப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

* நீரிழிவு நோயைத் தடுக்கும்

* இதயத்தை பாதுகாக்கும்

* ஞாபக சக்தியை அதிகரிக்கும்

* கொழுப்பை குறைக்கும்

* இளமையை பராமரிக்கும்

கருப்பை கோளாறுகளைச் சரிசெய்கிறது3 157

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை வேர்க்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டி உண்டாவதையும் இது தடுக்கிறது.

பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் ஆகியவை வேர்க்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாகப் பெண்களுக்குக் கருப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதை தடுக்கிறது.

கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது

வேர்க்கடலை ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். ஆனால் அதை தினசரி அடிப்படையில் அளவாக உட்கொள்ளவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நாளில் 100 கிராம் வேர்க்கடலை 60 சதவீத ஃபோலேட் தேவையைக் கவனித்துக்கொள்வதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்ணுக்கு ஃபோலேட் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது முதல் சில மாதங்களில் கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படாது

வேர்க்கடலை உண்மையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு சிறந்த உணவு தேர்வாகும். அவற்றில் புரதம் மற்றும் ஃபோலேட் உள்ளன. கர்ப்ப காலத்தில் வளரும் சிசுவிற்கு குறிப்பாக மூளை மற்றும் முதுகெலும்புகளில் ஃபோலேட் மற்றும் ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படுகின்றன. வேர்க்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.

எனவே வேர்க் கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்ப ப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் வேர்க்கடலையை எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு இது சிறப்பாக அமையும்.

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

வேர்க்கடலையில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இவை பிறப்புக் குறைபாடுகளை தடுக்கின்றன. இதுதவிர ஃபோலேட் நிறைந்த உணவுகள் தாய்க்கு மட்டுமல்ல, சேய்க்கும் நன்மை பயக்கும். கருவின் மூளையின் வளர்ச்சிக்கு ஃபோலேட் மிகச் சிறந்தது. எனவே, வேர்க்கடலை கர்ப்ப காலத்தில் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

புரதம் மற்றும் கலோரிகள்

100 கிராம் வேர்க்கடலை ஃபோலேட் தேவையை மட்டுமல்லாமல், புரதத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இது தவிர, இதில் அதிக கலோரிகள் உள்ளன. இது ஆற்றலை அதிகரிக்கும். வேர்க்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி, அதனை பாலில் வேக வைத்துக் குடிப்பதால் ஆண்மை மற்றும் வீரியம் அதிகரிக்கிறது.9 15746

இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. இதன் விளைவாக உயர் அழுத்தத்தை இது சரிபார்க்கிறது. மேலும், இது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. கர்ப்பகால நீரிழிவு நோய் விலகி இருப்பதை உறுதி செய்வதற்காக இவை அனைத்தும் பயன்படுகின்றன.

எடை அதிகரிப்பு அபாயத்தைக் குறைக்கிறது

பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது பற்றிக் கவலைப்படுகிறார்கள். இதைத் தடுக்க, வேர்க்கடலை உங்களுக்கு உதவும். வேர்க்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கலோரிகளைக் கட்டுப்படுத்த உதவும் பிற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. மேலும், வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவுகின்றன.

மனச்சோர்வு எதிர்ப்பு

கர்ப்பம் தரிப்பது என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அது சில சமயங்களில் மன அழுத்தமாகவும் இருக்கலாம். மனச்சோர்வை தடுக்க, உணவில் வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் மனச்சோர்வு குறையும்.

சைவ உணவு உண்பவர்களும், மீன் சாப்பிட விரும்பாதவர்களும் வேர்க்கடலையை மாற்றாக பயன்படுத்தலாம். இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாக இருக்கிறது. உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.

ஒவ்வாமை பிரச்சனை

கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை அல்லது எந்த உணவிற்கும் ஒவ்வாமை இருந்தால், அவற்றை எல்லா நேரங்களிலும் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமை ஏற்படும்போது வேர்க்கடலை எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும், வேர்க்கடலை சாக்லேட், தானியங்கள், இனிப்பு போன்ற பல்வேறு வகையான உணவுகளிலும் கலந்து இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேர்க்கடலை மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டி. இவற்றை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உட்கொள்ள வேண்டும். உப்பு வேர்க்கடலை, சர்க்கரை வேர்க்கடலை மற்றும், பொரித்த வேர்க்கடலைகளை கர்ப்ப காலத்தில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.