27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
625.0.560.350.160.300.053. 3

உங்களுக்கு சரும வறட்சியை போக்கணுமா? அப்போ நெய்யை இப்படி பயன்படுத்துங்க

நெய் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகில் கூட பெரிதும் பயன்படுகின்றது.

பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள்.

இதற்கு நெய்யை பயன்படுத்தி எளிய முறையில் சரும அழகினை மெருகூட்ட முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

625.0.560.350.160.300.053. 3

  • சிறிதளவு நெய்யை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து எதிர்காலத்தில் சரும வறட்சியை தடுக்க பாதுகாப்பான மருந்தாகும்
  • 5 மேசைக்கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.
  • சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.
  • தினமும் படுக்க போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.