நடிகை திரிஷா, இவர் 20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து முன்னேறினார். பின்னர் கதாநாயகியாக உயர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை அளித்துள்ளார். இவர் அரண்மனை 2 படத்தில் பேய் அடித்த கதாநாயகியாக வலம் வந்தார்.
இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றி அடைந்தது. வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் “நாயகி” படத்தில் பேய் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் இந்த படமானது நினைத்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. பின்னர் 96 என்னும் படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றி அடைந்தது. கொரோ னா வைரஸின் தா க்கம் காரணமாக தற்போது இந்தியாவில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.
இதனால் அனைவரும் வீட்டுக்குள் இருந்தபடி தங்களுக்கு பிடித்த செயலில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் , ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் அரிய காணொளிகளை வைரலாக்கி வருகின்றனர்.அந்த வகையில், நடிகை திரிஷாவின் சிறு வயது புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.