3

தெரிந்துகொள்வோமா? கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல்

கர்ப்பிணி பெண்கள் வழக்கத்தை விட மாறாக மூன்று வேளைக்கு பதில் ஆறு வேளை உணவு உட்க்கொள்ள வேண்டும்.

சைவ உணவுகளை பொறுத்தவரை தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை கட்டாயம் உட்க்கொள்ள வேண்டும்.

பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடைக்கட்டி என புரதம் நிறைந்த பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளில் முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் போன்றவற்றை சாப்பிடலாம்.3

இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை, பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பம் தரித்த நேரங்களில் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல், சிறுநீர் தொற்று போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.