28.8 C
Chennai
Thursday, Jul 17, 2025
amil News manoj doop for rajini in enthiran

வெளிவந்த ரகசியம்! எந்திரனில் ரஜினிக்கு டூப் போட்டது இவர்தான் …..

ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது யார் என்பது குறித்த ரகசியம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகி உள்ளது.

எந்திரனில் ரஜினிக்கு டூப் போட்டது இவர்தான் – 10 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்
ரஜினிகாந்த், மனோஜ் பாரதிராஜா
amil News manoj doop for rajini in enthiranரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்ததோடு பிரம்மாண்ட வெற்றியும் பெற்றது. இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார்.

இதில் வசீகரன், சிட்டி இருவரும் வரும் காட்சிகளில் பாடி டபுள் என்கிற வகையிலான டூப் போட்டு நடித்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ். எந்திரன் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், மனோஜ் தற்போது அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனோஜ் எந்திரன் படத்தில் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.