தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட 4 மாநிலங்களில் எடுக்கப்பட்ட வவ்வால்களின் மாதிரிகளில் கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ICMR கூறியுள்ளது.
இந்திய வவ்வால்கள் மத்தியில் கொரோனா பரவல் குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மாதிரிகளை எடுத்தனர். அதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வவ்வால்களில் சார்ஸ் கோவ் வைரஸ் 2 இருப்பது உறுதியாகியுள்ளது.
மொத்தம் 7 மாநிலங்களில் நடந்த ஆய்வில் கேரளா, இமாச்சலப்பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்த வவ்வால்களில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வவ்வால்கள் பரந்த அளவிலான கொரோனா வைரஸ்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் என்று அறியப்படுகின்றது. மேலும், வவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ (இடைநிலை விலங்கு) கொரோனாவை பரப்பி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.