இந்தியர்களுக்கு சட்னி மிகவும் விருப்பமான ஓர் உணவுப் பொருள். குறிப்பாக இட்லி, தோசை போன்றவற்றை வீட்டில் செய்யும் போது, அதற்கு சட்னி இல்லாமல் அந்த சமையல் முழுமையாகாது. அந்த அளவில் சட்னியை விரும்பி சாப்பிடக்கூடியவர்கள் தான் இந்தியர்கள். சொல்லப்போனால், ஒருசில ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சட்னி வடிவில் செய்து உட்கொண்டால், அது மிகவும் சுவையானதாக இருக்கும்.
தற்போது உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்கத்தால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நம்மை அண்டாமல் இருக்க வேண்டுமானால், அதற்கு தனிமைப்படுத்துதல் முதன்மையான ஓர் வழியாக கருதப்பட்டாலும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்வதும் முக்கியம்.
ஏனெனில் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களைத் தான் கொரோனா வைரஸ் எளிதில் தாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே கொரோனாவில் இருந்து உங்களைப் பாதுகாக்க, வீட்டில் முடங்கி இருக்கும் இந்த காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதே சிறந்த வழி.
அதிலும் தற்போது பல வெரைட்டியான உணவுகளை நம்மால் கடைகளில் வாங்கி சாப்பிட முடியாது. எனவே பலரது வீடுகளிலும் இட்லி, தோசை தான் காலை மற்றும் இரவு நேர உணவாக இருக்கும். இவற்றிற்கு சிறந்த சைடு டிஷ்ஷாக நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் சில சட்னிகளை கீழே கொடுத்துள்ளோம். அந்த சட்னிகளை அவ்வப்போது சமைத்து உட்கொண்டு பயன் பெறுங்கள்.
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி மருத்துவ குணம் அதிகம் நிறைந்த ஒரு மூலிகை செடி. பலருக்கும் கொத்தமல்லி சட்னி என்றால் பிடிக்கும். இதைத் தயாரிப்பதும் மிகவும் ஈஸி. கொத்தமல்லி சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது.
செய்முறை
நன்மைகள்
* கொத்தமல்லியில் வைட்டமின் சி, கே மற்றும் புரோட்டீன்கள் ஏராளமாக உள்ளது.
* இது செரிமானத்தை மேம்படுத்தும்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும்.
* இதில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளதால், வாயில் புண் இருந்தால் அதை சரிசெய்யும்.
புதினா சட்னி
கொத்தமல்லி சட்னிக்கு அடுத்தபடியாக நல்ல சுவையான மற்றும் மணத்தைக் கொண்ட சட்னி தான் புதினா சட்னி. கோடையில் புதினா சட்னியை அதிகம் உட்கொள்வது நல்லது. ஏனெனில் இது வயிற்று எரிச்சலைத் தணித்து, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். மேலும் இதிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
நன்மைகள்
* புதினாவில் வைட்டமின் பி, சி, டி மற்றும் ஈ அதிகம் உள்ளது.
* வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* செரிமானத்தை சீராக்கும் மற்றும் அழற்சியைக் குறைக்கும்.
* பசியின்மையைப் போக்கி, பசியைத் தூண்டும்.
* நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
* குமட்டல் பிரச்சனையைப் போக்கும்.
கறிவேப்பிலை சட்னி
இந்தியாவில் கறிவேப்பிலை இல்லாத சமையலைப் பார்க்கவே முடியாது. சமைக்கும் அனைத்து சமையலிலும் தாளிக்கும் போது கறிவேப்பிலை சேர்க்காமல், அந்த சமையலே பூர்த்தியாகாது. இது நல்ல சுவை மற்றும் மணத்தைக் கொடுப்பதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது. மேலும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பல நோய்களை கட்டுப்படுத்த கறிவேப்பிலை பெரிதும் உதவி புரியும்.
நன்மைகள்
* கறிவேப்பிலையில் வைட்டமின்களான ஏ, பி, சி, ஈ, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
* இது ஆன்டி-ஆக்ஸிடன்ட், வயிற்றுப்போக்கு மற்றும் இரத்த சோகை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
* இரைப்பைக் குடல் பிரச்சனைகளை சரிசெய்யும்.
* சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த கெட்ட அல்லது LDL கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
தக்காளி சட்னி
இட்லி தோசைக்கு நல்ல புளிப்புச் சுவையுடனான சட்னி சாப்பிட நினைத்தால், பலரும் செய்வது தக்காளி சட்னியைத் தான். தக்காளி சட்னியை பலவாறு சமைப்பார்கள். எப்படி சமைத்தாலும், அனைத்து வகையான தக்காளி சட்னியும் நாவூறும் வகையிலான நிறத்துடன், அற்புதமான சுவையைக் கொண்டிருக்கும்.
நன்மைகள்
* தக்காளியில் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இதில் ஃபோலேட் மற்றும் பொட்டாசியமும் அதிகமாக உள்ளது.
* தக்காளியில் சோடியம் மற்றும் கொலஸ்ட்ரைல் குறைவு.
* தக்காளி சட்னி இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்ய உதவும்.
* இந்த சட்னி இரத்தத்தை சுத்தம் செய்யும்.
* இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் பல்வேறு நோய்களை எதிர்த்து நல்ல பாதுகாப்பளிக்கும்.
நெல்லிக்காய் சட்னி
நெல்லிக்காய் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் நெல்லிக்காய் கொண்டு சட்னி செய்து சுவைத்ததுண்டா? பெரும்பாலானோருக்கு நெல்லிக்காய் பிடிக்காது. ஏனெனில் இது சற்று புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவையைக் கொண்டிருக்கும். ஆனால் இதைக் கொண்டு சட்னி செய்தால், அற்புதமாக இருக்கும்.
நன்மைகள்
* நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
* இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் மற்றும் இன்சுலின் சுரப்பை தூண்டும். இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் சட்னி மிகவும் சிறப்பான ஒரு சைடு டிஷ் எனலாம்.
வெங்காயம் மற்றும் பூண்டு சட்னி
வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த இரண்டு பொருட்களும் தான் பெரும்பாலான இந்திய உணவுகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. வெங்காயம், பூண்டு கொண்டு சட்னி அரைத்து உட்கொண்டால், சுவையாக இருப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலுபெறும். அதோடு, இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
நன்மைகள்
* இந்த சட்னி செரிமானத்தை மேம்படுத்தும்.
* இரத்த கொலஸ்ட்ராலை சீராக்கும்.
* வெப்ப பக்கவாதத்தை எதிர்த்து நல்ல பாதுகாப்பளிக்கும்.
* சளி மற்றும் இருமல் பிரச்சனையைப் போக்கும்.
* இந்த சட்னியில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன.