தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர்தான் இந்த கவர்ச்சி தீவு கிரண்.
சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் கிரண் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.
கிரண், தற்போது அப்லோட் செய்துள்ள Tiktok வீடியோவை பார்த்து மிரண்டு போயுள்ளார்கள் மக்கள். அஜித்தின் வில்லன் படத்தில் வந்த Hello Hello என் காதலா என்கிற பாட்டை Tiktok செய்து அதை Upload செய்துள்ளார். இவர்கள் இருவரும் அதே படத்தில் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார்கள்.