26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
abirami venkatachalam

போலி புகைப்பட சர்ச்சையில் சிக்கும் நடிகைகள்…

பிரேமம் படத்தின் மூலம் தென்னக அளவில் புகழ் பெற்றவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவருடைய முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, மார்ஃபிங் செய்யப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த அனுபமா சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். அத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அக்கா, தங்கை கிடையாதா என காட்டமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

abirami venkatachalam

நடிகை அனுபமா பரமேஸ்வரன்

இதேபோன்ற மார்ஃபிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மற்றொரு நடிகையான மீரா மிதுன். சோசியல் மீடியாவில் இருக்கும் கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தீர்க்க முடியும் என சொல்லியுள்ள மீரா, பெண்களின் பாதுகாப்பில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டுமென ட்வீட் செய்துள்ளார்.

anupama parameshwaran

இது ஒருபக்கம் இருக்க போலி கணக்குகளின் தொல்லையால் சமூக வலைதளங்களில் இருந்தே விலகி ஓடியிருக்கிறார் பிக் பாஸ் புகழ் அபிராமி. இந்த போலி புகைப்படங்களை விடவும் இதை நிஜம் என நம்பி தன்னை தாக்கும் பொதுமக்களை கண்டு அதிசயிப்பதாக அபிராமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு பிக் பாஸ் புகழ் நடிகையான லாஸ்லியாவின் பெயரிலும் போலி ஆபாச வீடியோக்கள் சில தினங்களாக இணையத்தில் அதிகளவில் பரவி வந்தன. ஆரம்பத்தில் இதுகுறித்து பேசாமல் இருந்த லாஸ்லியா, பின்னர் பொய்களும் எதிர்மறையான எண்ணங்களும் சூழ்ந்துள்ள இவ்வுலகை புன்னைகையால் மட்டுமே நாம் கடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.meera 1

நடிகை லாஸ்லியா

ஒரு பக்கம் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் போராடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இதுபோன்ற போலி செய்திகளையும் போலி புகைப்படங்களையும் பரப்பி களங்கம் ஏற்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.