27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
75a883f656f46a5b0421

அதிரடியான கதையை ரெடி பண்ணும் அட்லி?? யாருக்கு தொியுமா?

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு பிறகு விஜயை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

பிகில் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றிருந்தாலும் சாதாரண கதையை கொண்ட திரைப்படம் என்பதால் மீண்டும் ஒரு கதையுடன் விஜயை அணுகிய அட்லீக்கு அவர் நோ சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.
75a883f656f46a5b0421

இதனை அடுத்து அட்லி அஜித்தை வைத்து படம் இயக்க முயற்சிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அஜித்தின் கால்ஷீட்டை வைத்துள்ள சில தயாரிப்பாளர்கள் அட்லியை அணுகியதால் அவர் கதையை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதாவது வெளியானால் தான் தெரிய வரும்.