625.500.560.350.160.3

நம்ப முடியலையே… நடிகை ராஷ்மிகா மந்தானாவுடன் க்ரஷில் இருக்கும் ஹரிஷ் கல்யாண்…

தென்னிந்திய சினிமாவில் தற்போது மூன்னணி நடிகைகாக கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் தெலுங்கில் வெளியான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த `கீதா கோவிந்தம்` என்ற படத்தின் மூலம் நடித்து பிரபலமானார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க சுல்தான் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். பலரும் இவர்மேல் க்ரஷ்ஷாக இருந்து வருகிறார்கள். இதில் ஹரிஸ் கல்யாணும் சேர்ந்துள்ளார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வளம்வருபவர் நடிகர் ஹரிஸ் கல்யாண். திரைப்படங்களில் ஒருசில படங்களில் நடித்து வந்த ஹரிஸ் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 1ல் கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் சில படங்களில் நடித்து இளம்பெண்களை கவர்ந்து வந்தார்.

இந்நிலையில் இவருடைய பெண் ரசிகர் ஒருவர் க்ரஷாக இருக்கும் ஒரு நடிகை யார் என்று கேள்வி கேட்டுள்ளார். அப்பெண்ணிற்கு பதிலளித்த ஹரிஸ், ராஷ்மிகா மந்தனா என்று கூறி ஹாஸ்டாக் செய்துள்ளார்.