கொரோனா காரணமாக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தொலைக்காட்சி தொடர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல சேனல்களும் பழைய தொடர்களை ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் நடிகர்கள் நடிகர் நடிகைகள் பலரும் வீட்டில் தங்களுடைய அன்றாட வேலைகளை சமூக வலைதளங்களில் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.
தமிழில் தற்போது மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் இந்த தொடருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவும் குறிப்பாக முல்லை குமரன் ஜோடிக்கு பல இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர்.
முதலில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் சித்ரா, தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படி சமூகவலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் ‘தங்களுடைய மேக்கப் இல்லாத முகத்தை போட்டோவாக போடுங்கள்’ என்று கேட்டதற்கு. அதற்கு அவர் எவ்வித தயக்கமுமின்றி தனது மேக்கப் இல்லாத போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. மேக்கப் இல்லாமலும் முல்லை மிக அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.