தமிழ் சினிமாவை பொருத்தவரை இவ்வளவு சீக்கிரம் யாரேனும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைய முடியுமா என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் சிவகார்த்திகேயன். டிவியை சரியாக உபயோகித்து தற்போது சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.
இருந்தாலும் சமீப காலமாக அவரின் படங்கள் கருத்துகள் சொல்லும் விதமாக அமைவதால் ரசிகர்களை பெரும்பாலும் கவரவில்லை. இதனால் தன்னுடைய பழைய ஃபார்முலாவுக்கு திரும்பி விட்டார் என்றே சொல்லலாம்.
கமர்சியல் படங்களில் ஆர்வம் காட்டும் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரிடம் மொக்கை வாங்கி வந்திருப்பதாக கோலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அல வைகுந்தபுரமுலோ. தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் எப்போதுமே ரீமேக் படங்களை இயக்குவதில் வல்லவரான மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் அந்த படத்திற்கு முதல் வரிசையில் துண்டு போட்டு வைத்துள்ளனர். அவரைத் தொடர்ந்து சிம்புவை வைத்து வாலு படத்தை கொடுத்த விஜய் சந்தர் அல்லு அர்ஜுன் வீட்டு வாசலிலேயே ரீமேக் ரைட்ஸ்காக கிடக்கிறாராம்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனும் அந்த படத்தை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுவதாக அவரது பக்கத்தில் இருந்து செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் மற்றவர்களைவிட அதிக பணம் கொடுப்பதாகவும், சொந்த தயாரிப்பிலேயே நடிக்கலாம் என ஐடியாவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் அல்லு அர்ஜுன் தரப்பில் சிவகார்த்திகேயனுக்கு அந்த படத்தின் உரிமையை தருவதில் உடன்பாடு இல்லை என தெரிகிறது. இதனால் அது விஷயமாக பேச கூட வர வேண்டாம் என தெரிவித்து விட்டார்களாம்.
பல விஷயத்தில் தன்னுடைய தந்திரமான செயல்கள் வெற்றி பெற்றாலும் இந்த விஷயத்தில் இப்படி ஆகிவிட்டதே என கவலையில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். காத்து எப்போதும் ஒரு பக்கமே வீசாது சார்!